நீர்வீழ்ச்சியும் பாதுகாக்கப்படும் காடும் இது|சுவீடன் வெற்றிநடை உலாத்தல்| Styggforsen,Rattvik,Sweden

சுவீடனின் டாலர்னா என்றழைக்கப்படும் பிராந்தியத்திலிருக்கும் ஸ்டிக்வோர்ஸன் என்ற பகுதியின் புவியியல் இதையடுத்துள்ள பகுதியில் சுமார் 377 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் விழுந்த விண்கல் ஒன்றின் விளைவுகளைக் காட்டுகிறது. அதன் பின்னர் இப்பகுதியும் ஸ்கண்டினேவியாவின் பெரும்பாலான வடக்குப் பகுதிகளைப் போல உறைபனியால் மூடப்பட்டிருந்தது. பனிப்படலம் மெதுவாக தெற்குப் பகுதியில் இளகி அதன்பின் ஆழமான கடலால் இப்பகுதி பல மில்லியன் வருடங்கள் மூடப்பட்டிருந்தது.

நவீன காலப் புவியியலின் காலடிகளும் இங்கே காணப்படுகின்றன. இயந்திரப்படுத்தலின் காலத்தில் இங்கே ஓடிக்கொண்டிருந்த ஆற்றிலிருந்து மின்சாரத் தயாரிப்பும், சிறு தொழிற்சாலைகளும் உண்டாக்கப்பட்டிருந்தன. தற்போது இங்கே சுமார் 36 மீற்றர் உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சியையும் அதையொட்டியுள்ள அருவியையும் காணலாம். 

பெரும்பாலும் காடாக வளர்ந்திருக்கும் இப்பகுதி இதன் புவியியல், சரித்திர, தொழிற்சாலைச் சரித்திரம் போன்றவற்றை எதிர்காலத்தினருக்கும் காட்டுவதற்காகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினருடன் வரும் பல சுற்றுலாப் பயணிகளை இங்கே காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *