இந்தியப் பத்திரிகையாளர்கள் 121 பேரின் உயிரை இவ்வருடத்தில் மட்டும் கொவிட் 19 பறித்திருக்கிறது.
இந்தியாவில் கொவிட் 19 சுமார் 4,000 உயிர்களைத் தினசரி பலியெடுக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட சில தொழில்துறையைச் சார்ந்தவர்களிடையே இறப்போர் தொகை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அவைகளிலொன்று பத்திரிகையாளர்களாகும். கொவிட் 19 தொடங்கிய காலம் முதல் இதுவரை 171 இந்தியப் பத்திரிகையாளர்கள் இவ்வியாதியால் இறந்திருப்பதாகத் தெரிகிறது.
மே 2021 மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மட்டும் தினசரி நான்கு பத்திரிகையாளர்கள் கொவிட் 19 ஆல் இறந்திருக்கிறார்கள் என்று மே 06 ம் திகதி வெளியான பட்டியல் குறிப்பிடுகிறது. ஏப்ரல் மாதத்தில் இறந்த பத்திரிகையாளர்கள் 90 பேராகும். மஹாராஷ்டிரா, உத்தர் பிரதேஷ், டெல்லி, தெலுங்கானாவில் இறந்த பத்திரிகையாளர் தொகை அதிகம்.
தவிஷி சிறீவத்சவா, ஹிமன்ஷு ஜோஷி, அங்கித் சுக்லா, யோகேஷ் குமார், அம்ஜாத் பத்ஷா, யாகிஷ் கத்தாரா, ஜமால் அஹமத், சிறீநிவாச ராவ் ஆகியோர் இறந்துபோனவர்களில் சிலராகும்.
சாள்ஸ் ஜெ. போமன்