சீனாவில் அடுத்தடுத்து வந்த இரண்டு சூறாவளிகள் பெரும் சேதங்களை விளைவித்ததுடன் 12 பேர் இறந்திருக்கிறார்கள்.
சுமார் இரண்டு மணி இடைவெளிக்குள் சீனாவின் கிழக்குப் பாகத்துச் சிறு கிராமப்பகுதிகளை வெள்ளியன்று தாக்கியிருக்கிறது. மாலை ஏழு மணியளவில் ஷங்காய்க்கு அருகேயிருக்கும் ஷிங்சே என்ற நகரைத் தாக்கிய முதல் சூறாவளி அப்பகுதியில் மின்சார விநியோகத்தை நிறுத்தியது. தொழிற்சாலையொன்றையும் வேறு கட்டடங்களையும் தாக்கிய அச்சூறாவளியால் நால்வர் இறந்தனர், சுமார் 130 பேர் காயப்பட்டனர்.
அதையடுத்து மாலை சுமார் எட்டு மணியளவின் வுஹான் பிராந்தியத்திலிருக்கும் சிறு நகரொன்றைத் தாக்கியது. அங்கும் ஆயிரக்கணக்கான வீடுகளின் மின்சார விநியோகம் தடைப்பட்டது. 28 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு மேலும் 130 வீடுகளில் இடிபாடுகள் உண்டானது. அங்கே எட்டுப் பேர் இறந்து போனார்கள். மேலும் 230 பேர் காயமடைந்தார்கள் என்று சீனாவின் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்