பெப்ரவரியில் இந்திய அரசு சமூகவலைத்தளங்களுக்கு போட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டிய கெடு மே 26 ஆகும்!
வட்ஸப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசின் சமூகவலைத்தளச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு இந்தியர்களுக்குக் கொடுக்கும் “கருத்துரிமைகளின் பாதுகாப்பு” என்பதற்கு எதிராக இருப்பதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
முக்கிய சமூகவலைத்தளங்கள் “முறைப்பாடுகளை எதிர்கொள்ளும் அதிகாரி” ஒருவரைக் கொண்டிருக்கவேண்டும். அவர் அரசு குறிப்பிட்ட ஒரு பாவனையாளரின் விபரங்களைக் கேட்கும்போது, அது சட்டங்களுக்கு உட்பட்டதாயின் அவற்றை உடனே ஒழுங்குசெய்து சமர்ப்பிக்க வேண்டும்.
சமூகவலைத்தளங்கள், வருடத்தில் எந்த நாளும், 24 மணி நேரத்திலும் இந்தியாவின் சட்ட ஒழுங்கு அமைப்பினரோடு தொடர்பிலிருக்கும் ஒரு அதிகாரியைக் கொண்டிருக்கவேண்டும்.
சமூகவலைத்தளப் பாவனையாளர்கள் எந்தச் சமயத்திலும் தொடர்பு கொண்டு தமக்கு அத்தளத்துடன் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் அதிகாரியொருவரைச் சமூகவலைத்தளங்கள் கொண்டிருக்கவேண்டும்.
வட்ஸப் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தமது பாவனையாளர்கள் தொடர்புகளின் முழு விபரங்களையும் திரட்டிக்கொள்ளும் நிலையிலிருக்கவேண்டும். அவைகளை அரசுக்குத் தேவையான சமயத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
மேற்குறிப்பிட்ட இவைகள் தவிர வேறு சிறு தொழில்நுட்பத் தீர்வுகளையும் இந்திய அரசு சமூகவலைத்தங்கள் கொண்டிருக்கவேண்டுமென்பது இந்திய அரசின் கோரிக்கை.
சாள்ஸ் ஜெ. போமன்