ஒரே முஸ்லீம் குடுமத்தில் இனவெறியனால் நால்வர் கொல்லப்பட்டதைக் கண்டித்துக் கனடாவில் ஊர்வலம்.

காலாற நடக்கப் போயிருந்த குடும்பத்தினர் ஐவர் வீதியைக் கடக்கும்போது அவர்கள் முஸ்லீம்கள் என்பதற்காக அவர்கள் மீது தனது வாகனத்தை மோதினான் ஒரு இனவெறியன். கனடாவில் ஒன்ராரியோவில், லண்டன் என்ற இடத்தில் அச்சம்பவம் கடந்த வாரத்தில் நடந்தது. பல இனங்கள் வாழும் ஒற்றுமையான நாடென்ற அடையாளமுள்ள கனடியர்களுக்கு அதிர்ச்சியை அளித்த அச்சம்பவம் சர்வதேச ரீதியிலும் கண்டிக்கப்பட்டது.

46, 44 வயதான தம்பதிகளும் அவர்களின் 15 வயது மகளும், 74 வயதான பாட்டியும் கொல்லப்பட பாயஸ் என்ற ஒன்பது வயது மகன் மட்டும் கடுமையான காயங்களுடன் அத்தாக்குதலில் தப்பியிருக்கிறான். பாகிஸ்தானைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர் 2007 இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்திருந்தார்கள். 

இஸ்லாத்துக்கு மேலான வெறுப்பு, நிறவெறி ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டே நத்தானியல் வெல்ட்மான் என்ற 30 வயது இளைஞன் அவர்கள் மீது தனது பாரவண்டியை மோதியிருப்பதாகத் தெரிகிறது. 

லண்டன், ஒன்ராரியோவிலிருக்கும் பள்ளிவாசலையண்டி நடந்த ஊர்வலத்தைத் தவிர கனடாவின் வேறு பல நகரங்களிலும் இன, மத வேறுபாடுகளற்ற சமூகத்தை ஆதரிக்கும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்தார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *