உலகிலேயே ஊடகங்களின் மீது அதிக நம்பிக்கையுள்ளவர்கள் பின்லாந்து மக்கள்தான்.

நோர்டிக் நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஊடகங்கள் மீதும், அரசாங்கத் திணைக்களங்களின் மீதும் பொதுவாகவே அதிக நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களிலும் மிக அதிகமாக ஊடகங்கள் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பின்லாந்து மக்கள் என்கிறது உலக நாடுகளில் ஊடகங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஆராய்ந்த ரோய்ட்டர் இன்ஸ்டிடியூட்.

கடந்த வருடம் நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவிக்கொண்டிருந்த சமயத்தில் பின்லாந்து மக்களின் ஊடகங்கள் மீதான நம்பிக்கை மேலும் ஒன்பது விகிதத்தால் அதிகரித்து 65 விகிதமானவர்கள் அவை வெளியிடும் விபரங்களை நம்புகிறார்கள். 81 விகிதமான பின்லாந்து மக்கள் செய்திகளை இணைத்தளங்களில் வாசிக்கிறார்கள். அதே சமயம் தினசரிகள், தொலைக்காட்சி போன்றவைகளைத் தொடர்ந்தும் பாவித்து வருகிறார்கள். 

பின்லாந்தை அடுத்து டென்மார்க் மக்கள் 59 %, நோர்வே மக்கள் 57 %, சுவீடன் மக்கள் 50 % ஊடகங்களை நம்புகிறார்கள் என்று தெரியவருகிறது. ஐக்கிய ராச்சியத்திலோ 36 % மக்களே தாம் பாவிக்கும் ஊடகங்களை நம்புகிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *