அமெரிக்கக் உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான முதலாவது அரையிறுதிப் மோதலில் பெருவும், பிரேசிலும் மோதவிருக்கிறார்கள்.
அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு இந்தப் பக்கத்தில் ஐரோப்பிய உதைபந்தாட்டக் கோப்பைக்கான காலிறுதிப் போட்டிகள் நேற்று வெள்ளியன்று நடந்ததில் சுவிஸும், பெல்ஜியமும் தோற்கடிக்கப்பட்டன. அதே சமயத்தில் அத்திலாந்திக்குக்கு அடுத்த பக்கத்தில் நடந்துவரும் கொப்பா அமெரிக்கா மோதல்களில் ஒரு அரையிறுதி மோதலுக்கானவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
காலிறுதிப் போட்டிகளில் முறையே, பராகுவே, சிலி நாட்டின் குழுக்களைத் தோற்கடித்த பெருவும், பிரேசிலும் அரையிறுதிப் போட்டியொன்றில் திங்களன்று ரியோ டி ஜெனிரோ அரங்கில் மோதவிருக்கின்றன.
பராகுவேயுடன் மோதியபோது பெரு 3 – 3 என்ற முடிவையே எடுக்க முடிந்தது. எனவே நேரம் நீட்டப்பட்டு விளையாட்டுத் தொடர்ந்தது. அதையடுத்து இரண்டு அணிகளும் தமது வலைகாப்பவர்களின் திறமையைச் சோதிக்கும் போட்டியில் முடிவெடுக்க வேண்டியதாயிற்று. அதன் மூலமே பெரு அரையிறுதிப் போட்டிக்குத் தயாராகியிருக்கிறது.
சிலேயுடன் காலிறுதியில் விளையாடிய பிரேசில் இரண்டாம் பகுதியின் ஆரம்பக் கட்டத்திலேயே ஒரு வீரரை வெளியே அனுப்பவேண்டியதாயிற்று. ஒரு ஆள் குறைவான நிலையில் பிரேசில் விளையாடியது. பிரான்ஸின் குழுவொன்றுகாக விளையாடும் பிரேசில் வீரர் லூகாஸ் பகெட்டா மோதலில் ஒரேயொரு கோலைப் போட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்