தென்னமெரிக்காவின் பெருவில் 800 வருடத்துக்கு முந்தைய பாதுகாக்கப்பட்ட உடலொன்று கண்டெடுக்கப்பட்டது.

பெரு கடற்கரைக்கும் ஆண்டிஸ் மலைப்பிராந்தியத்துக்கும் இடையே வாழ்ந்தவர்களின் கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒரு உடலொன்று பெருவின் லீமா நகரில் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த உடல் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவருடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி மூலம் காணப்பட்டிருக்கிறது

கண்டுபிடிக்கப்பட்ட உடலின் பாகங்களெல்லாம் கயிறுகளால் சுற்றிக் கட்டபடப்பட்டிருந்தது. கைகள் முகத்தை மூடியிருந்தன. அது, குறிப்பிட்ட காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்தவர்களின் அந்திம கிரியை முறை என்று அகழ்வாராட்சியாளரொருவர் விளக்கினார். உடலுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டிருந்த மண் பாத்திரங்கள், காய்கறிகள், கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்களையும் அவ்விடத்தில் கண்டெடுத்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்