அரையிறுதிப் போட்டிக்குப் போகும் நாலாவது நான்காவது தென்னமெரிக்க அணியாகப் பலமான ஆர்ஜென்ரீனா.
ஆர்ஜென்ரீனாவின் சர்வதேசப் புகழ்பெற்ற லயனல் மெஸ்ஸி ஈகுவடோருக்கு எதிரான உதைபந்தாட்ட மோதலில் தனது பிரத்தியேகத் திறமைகளைக் காட்டினார் எனலாம். ஆரம்பத்திலிருந்தே ஆர்ஜென்ரீன அணி பந்தைத் தம்மிடமே வைத்திருந்ததுடன் எதிரணியின் பிராந்தியத்துக்குள் சுழன்று வேட்டையாடிக்கொண்டிருந்தது.
ஆட்டத்தின் முதலாவது பாதிக்கு முன்னர் மெஸ்ஸி அழகாகக் கைப்பற்றித் தன்னிடம் கொடுத்த பந்தை வலைக்குள் போட்டு ஆர்ஜென்ரீனாவுக்கு 1 – 0 ஐக் கொடுத்தார் ரொட்ரிகோ டி போல். இரண்டாவது முறை ஆர்ஜென்ரீனா பந்தை வலைக்குள் போடும்போது மோதல் முடியும் நேரமாகிக்கொண்டிருந்தது. வீரர் மாற்றத்தில் உள்ளே வந்த லௌதாரோ மார்ட்டீனஸ் அதைச் செய்தார்.
இரண்டாவது கோலுக்கும் பந்தை மார்ட்டீனஸுக்குப் பரிமாறிய மெஸ்ஸியின் சந்தர்ப்பம் மோதலின் கடைசி நிமிடத்தில் வந்தது. 3 – 0 என்ற இலக்கத்தைத் தனது குழுவுடன் சேர்ந்து பெற்றுக்கொண்ட மெஸ்ஸியின் குழு கொலம்பியாவைத் தனது அரையிறுதி மோதலில் சந்திக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்