அல்பாவாலும் பேட்டாவாலும் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டு தொற்றுக்குள்ளான 90 வயதான மாது.
தென்னாபிரிக்காவில் முதலில் காணப்பட்ட பேட்டா, பிரிட்டனில் முதலில் காணப்பட்ட அல்பா ஆகிய இரண்டு வகை கொரோனாக் கிருமிகளாலும் தொற்றப்பட்டு இறந்துவிட்ட பெல்ஜிய மாது மருத்துவ உலகுக்குப் புதியதொரு சவாலை ஏற்படுத்தியிருக்கிறார். வயதுவந்தவர்களுக்கான இல்லத்தில் மார்ச் மாதத்தில் இவர் நோய்வாய்ப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்தே நாட்களில் உயிரிழந்தார்.
அந்தச் சமயத்தில் பெல்ஜியத்தில் பரவியிருந்த அந்த இரண்டு வகை கிருமிகளும் இரண்டு பேர் மூலம் அந்த மாதுவுக்குத் தொற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றை அவர் எங்கிருந்து பெற்றார், போன்ற விபரங்களையும் அவரது மரணம் பற்றிய முழு ஆராய்ச்சியும் இதுவரை தெளிவாகாகாவிட்டாலும் நடந்த விபரங்கள் மாநாடொன்றில் வெளியிடப்பட்டன.
இவ்வருட ஆரம்பத்தில் பிரேசிலில் இருந்து இதே போலவே இரண்டு வகையான கொரோனாக் கிருமிகள் இரண்டு பேரைத் தொற்றியதாகக் குறிப்பிடப்பட்டாலும் அதுபற்றிய மேலதிக விபரங்களை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்