பிரேசிலில் விளையாடப்படும் கொப்பா அமெரிக்கா கிண்ண மோதலில் பிரேசிலே வெல்லும் என்பது பொய்யானது.

லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பாவின் திறமான உதைபந்துக் குழு யாரென்பது தீர்மானிக்கப்படவிருக்கிறது. அமெரிக்காவின் பாகத்துக்கான திறமையான குழு ஆர்ஜென்ரீனா என்பது சனியன்று இரவு தீர்மானிக்கப்பட்டது. ரியோ டி ஜெனிரோவின் மரக்கான அரங்கில் ஆர்ஜென்ரீனாவை எதிர்கொண்டது பிரேசில் குழு.

https://vetrinadai.com/news/loiz-diaz-3rd-colombia/

28 வருடங்களாக ஆர்ஜென்ரீனா கொப்பா அமெரிக்காக் கிண்ணத்துக்காகக் காத்திருந்தது. அந்த காத்திருப்புக்கு உயிர்கொடுத்துத் தனது நாட்டு மக்களின் மடியில் அந்தக் கனியைப் பறித்துக் கொடுத்திருக்கிறார் ஆஞ்சல் டி மரியா என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கு முதல் அந்தக் கிண்ணத்தில் ஷாம்பெய்னை ஆர்ஜென்ரீனா 1993 இல் தான் நிறைத்துக் குடித்திருந்தது. ஈகுவடோரில் நடந்த அந்த மோதலில் ஆர்ஜென்ரீனா மெக்ஸிகோவை வென்று கிண்ணத்தைத் தூக்கியது.

https://vetrinadai.com/news/argentina-colombia-semifinal/

அன்றைய ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திரமாக விளங்கியவர் கபிரியேல் பட்டிஸ்டூட்டா. 1991 லும் 1993 லுமாக இரண்டு தடவைகள் கொப்பா அமெரிக்கா கிண்ணத்தைத் தனது நாட்டுக்காக வெற்றியெடுத்துக் கொடுத்தவர் அவர். இம்முறை ஆர்ஜென்ரீனாவுக்காக விளையாடும் மேலுமொரு சர்வதேச நட்சத்திரம் லையனல் மெஸ்ஸி ஆகும். 34 வயதான அவர் மோதலின் கடைசி நிமிடங்களில் வலைக்குள் பந்தை உதைக்க ஒரு சந்தர்ப்பம் பெற்றார். ஆனால் பிரேசிலின் வலைக்காப்பாளர் எடெர்சனை அவரால் ஏமாற்ற முடியவில்லை.

கொப்பா அமெரிக்காவின் ஆரம்ப காலங்களில் ஆர்ஜென்ரீனாவே தென்னமெரிக்கக் கால்பந்தாட்டக்குழுக்களின் சிம்ம சொப்பமனாக இருந்தது. 1947 கள் வரையில் அவர்கள் 9 தடவைகள் அந்தக் கிண்ணத்தை வென்றிருந்தார்கள். அதன் பின்னர் பராகுவாய், பொலீவியா ஆகிய நாடுகளும் ஆர்ஜென்ரீனாவுடன் இணையாக மல்லுக்கட்ட வந்திருந்தன. இப்போது 15 வது தடவையாக அந்த வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றிருக்கும் ஆர்ஜென்ரீனா இதன் மூலம் உருகுவாய் நாட்டுக்கு இணையாக அதிக தருணங்களில் அதை வென்றிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *