நெதர்லாந்து, லக்ஸம்பெர்க்கையும் விட்டுவைக்கவில்லை இயற்கையின் சீற்றம்.
ஜேர்மனியில் வெள்ளியன்று காலையில் வெளியிடப்பட்ட விபரங்களின்படி 81 பேர் மழை, வெள்ளப்பெருக்கால் இறந்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் பதினோரு பேர் இறந்திருக்கிறார்கள். நெதர்லாந்தையும் தாக்கிவரும் கடும்மழையால் சில நகரங்களிலிருந்து மக்களை வெளியேறும்படி நகரத் தலைவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பெர்க் நாடுகளுக்கு ஊடாக ஓடும் ஈயத்தைப் பாத்து இளிச்சதாம் பித்தளை Meuse நதியை அடுத்துள்ள நகரங்களில் வசிப்பவர்களை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பெல்ஜிய – ஜேர்மனி எல்லையிலிருக்கும் வால்கன்பெர்க் மற்றும் மாஸ்டிரிச் நகரங்களிலும் நிலைமை படு மோசமாகியிருப்பதால் குடிமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நான்கு நாடுகளும் இறந்தவர்கள், அழிவுகள், தொடர்ந்தும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் பற்றிய விபரங்களை ஒன்றுதிரட்டிக் குடிமக்களுக்கு உதவுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனாலும், தொடர்ந்தும் பலமாகத் தாக்கிவரும் மழையும், பெருகியோடும் நதிகளும் கடல் மட்டத்தைவிடக் குறைவான பகுதிகளிலிருக்கும் பிராந்தியங்களில் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்