அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்சேமிப்பு மையத்தில் முதல் தடவையாக நீர்ப் பற்றாக்குறை.
ஓடும் கொலராடோ நதியிலிருந்து அணைக்கட்டு மூலம் ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்கம் Lake Mead ஆகும். நிவாடா, அரிசோனா மாநிலங்களின் எல்லையிலிருக்கும் இது 1930 இல் கட்டப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ், சந்தியாகோ, பீனிக்ஸ், டாக்ஸான், லாஸ் வேகாஸ் ஆகிய நகரங்கள் இந்த நீர்த்தேக்கத்தையே தங்கியிருக்கின்றன.
தொடர்ந்து பல வருடங்களாக மேற்கு அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் வரட்சி காரணமாக கொலராடோ நதியின் நீர் குறைந்து வருகிறது. கடந்த வருடம் அது சாதாரணமான அளவிலிருந்து 49 % ஐக் கொண்டிருந்தது. இவ்வருடமோ அது 40 % ஆகியிருக்கிறது. இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான Lake Powell லும் நீரின் அளவு பெருமளவு குறைந்திருக்கிறது.
அமெரிக்காவின் தெற்கு, மேற்கு மாநிலங்களுக்குப் பங்கிட்டளிக்கப்படும் நீரின் அளவு இதனால் கணிசமான அளவால் குறைக்கப்பட்டிருக்கிறது. விளைவாக, நீர்ப் பாவிப்பிலும் வெவ்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட நீர்த்தேக்கம் 1983 ல் தான் கடைசியாக நிரம்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்