நினைவுகளில் இலக்கிய வித்தகர் த.துரைசிங்கம் – பல விருதுகளுக்கு சொந்தக்காரர்
பல விருதுகளுக்கு சொந்தகாரராக விளங்கி ஈழத்து இலக்கியத்துறையில் தவிர்க்கமுடியாத ஒருவராக மிளிர்ந்தவர் கவிஞர் துரைசிங்கம்.பாடசாலை ஆசிரியராக தன் பணியை ஆரம்பித்த திரு. துரைசிங்கம் அவர்கள் ஓய்வுபெறும்போது மாவட்ட கல்விப்பணிப்பாராகி தன் அரச பணியை நிறைவாக்கியவர்.
யாழ்ப்பாண மாவட்டம் ,புங்குடுதீவில் பிறந்த கவிஞர் அவர்கள் ஈழத்தின் இலக்கியத்துறையில்,குறிப்பாக சிறுவர் இலக்கிய உலகில் பலராலும் அறியப்பெற்றவர்.

தன் இளமைக்காலத்தில் எழுத்துத்துறையின் மீதான ஆர்வத்தில் செய்தியாளராக தன் எழுத்துப்பணியை துவங்கி ஈற்றில் பல நூல்களை எழுதிய எழுத்தாளராகவும் பல விருதுகளுக்கு சொந்தக்காரராகவும் விடைபெற்றார்.

தமிழ் இலக்கியப்பரப்பில் குறைந்தளவு படைப்புக்கள் மட்டுமே வெளிவரும் சிறுவர் இலக்கியப்பரப்பில் இவரின் பங்கு தனியானதும் தனித்துவமானதுமாகும். இவற்றிற்கு இலங்கையில் சாகித்திய விருதுகள் பலவும் கிடைத்திருக்கிறது எனபதையும் குறிப்பிடலாம்.
அதனைவிட இவரின் இலக்கியப்பணியை கௌரவித்து கலாபூசணம் மற்றும் தமிழியல் விருதுகளும் வழங்கப்படிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றையநாள் இவரின் இழப்பை தொடர்ந்து ஆளுமைகள் பலரும் தம் அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிநடை ஊடகமும் ஈழத்தின் தனித்துவமான இலக்கியகர்த்தாவுக்கு தன் அஞ்சலிகளை பதிவு செய்கிறது.