அதியுயர் இரத்த அழுத்தமுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 30 வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.

சர்வதேச ரீதியில் பல முக்கிய ஆராய்வுகளைப் பிரசுரிக்கும் The Lancet journal சஞ்சிகையின் கட்டுரையொன்று உலக மக்களில் அதியுயர் இரத்த அழுத்தமுள்ளவர்களின் [hypertension] எண்ணிக்கை கடந்த 30 வருடங்களில் இரட்டையாக அதிகரித்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் வறிய மற்றும் வளரும் நாடுகளிலேயே வாழ்கிறார்கள் என்கிறது அவ்வாராய்ச்சிக் கட்டுரை.

உலகின் 184 நாடுகளில் மூன்று தசாப்தங்கள் இவ்வாராய்ச்சி நடாத்தப்பட்டது. இதற்காக 30 – 79 வயதானவர்களில் 100 மில்லியன் பேரின் இரத்த அழுத்த நிலை தொடர்ந்து கவனிக்கப்பட்டது. 

1990 இல் உலகின் 331 மில்லியன் பெண்களுக்கும் 317 மில்லியன் ஆண்களுக்கும் அதியுயர் இரத்த அழுத்தம் இருந்தது. அது 30 வருடங்களுக்குப் பிறகு 626 மில்லியன் பெண்களுக்கும் 652 மில்லியன் ஆண்களுக்கும் இருக்கிறது. 

அந்த நிலையிலிருப்பவர்கள் தற்போதிருக்கும் மலிவான மருந்துகள் மூலமே அதைக் குறைக்க முடியுமானாலும் அதுபற்றித் தெரிந்துகொள்ளாமலேயிருக்கிறார்கள். 53 விகித பெண்களும் 62 விகிதமான ஆண்களும் அதற்காக எவ்வித நிவாரங்களையும் தேடவில்லை.

வருடாவருடம் 8.5 மில்லியன் பேர் அதிக இரத்த அழுத்தத்தால் உண்டாகும் பக்கவிளைவுகளின் வியாதிகளால் இறந்து போகிறார்கள். இதைச் சரியான முறையில் கவனமெடுத்துக் கையாள்வதன் மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறவர்களை 30 – 40 விகிதத்தாலும், மாரடைப்பால் பாதிக்கப்படுகிறவர்களை 20 – 25 விகிதத்தாலும், இருதயப் பிரச்சினை ஏற்படுகிறவர்களை 50 விகிதத்தாலும் குறைக்கலாம்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *