லண்டனில் பொன் அணிகள் மோதல்(Battle of the Golds) – செப்ரெம்பர் 12ம் திகதி

யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி பழையமாணவர்கள் ஆகிய அணிகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட்போட்டியான “பொன் அணிகளின் மோதல்” (Battle of the Golds) இந்தவருடம் வரும் செப்ரெம்பர் மாதம் 12 ம் திகதி நடைபெறவுள்ளது.

வரலாற்றுப் பிரபல்யம் மிக்கதான பொன் அணிகளின் மோதல்(Battle of the Golds) , தாயகத்தில் வருடா வருடம் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ்ப்பாணக்கல்லூரி அணிக்குமிடையிலான பலமான போட்டியாக மிக பெருமெடுப்போடு 100 வருடங்களுக்கும் மேலாக நடைபெறும் போட்டியாகும். அதன்வழி கல்லூரிகளின் பழையமாணவர்கள் லண்டனிலும் கடந்த 2015 ம் ஆண்டிலிருந்து இந்த போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றார்கள். அதனடிப்படையில் இந்தவருடமும் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்ரெம்பர் 12 ம் திகதி லண்டன் ஹரோவில் அமைந்துள்ள West Harrow recreation மைதானத்தில் இந்த பொன் அணிகளின் மோதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவசமான நிகழ்வாக அமையும் இந்த நிகழ்வு, காலை 11மணியிலிருந்து மைதானத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதெல்லையற்ற திறந்த போட்டியாகவும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியாகவும் இருவேறு துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் முக்கியமாக இடம்பெறவுள்ளது.

கடந்த பொன் அணிகளின் மோதலில் சென்பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்கள் அணி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்திருந்தது. இந்தவருடமும் எந்த அணியின் பக்கம் வெற்றி என்பது பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *