தீபாவளிக்கு முதல் நாளிரவு சரயு நதியோரத்தில் 7.5 லட்சம் தீபங்களை எரியவைக்க யோகி ஆதித்யநாத் திட்டம்.
உத்தர் பிரதேசத்தில் 2017 முதல் பிரதம மந்திரியாகியிருக்கும் யோகி ஆதித்யநாத் வருடாவருடம் சரயு நதிக்கரையில் தீப உற்சவம் நடத்துவதை பாரம்பரியமாக்கியிருக்கிறார். தீபாவளி தினத்துக்கு முன்னிரவில் ராம் கி பைரி படிக்கட்டுகளில் லட்சக்கணக்கில் தீபங்களை எரியவிடுவது வழக்கம். வரவிருக்கும் தீபாவளி உற்சவத்தை முன்னிட்டு 7.5 லட்சம் தீபங்களை எரியவைத்து கின்னஸ் சாதனை நிகழ்த்த அவர் திட்டமிட்டிருக்கிறார்.
சுமார் 7,000 பேர் அந்தத் தீப உற்சவ நிகழ்ச்சிக்கு உதவவிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியாவிலிருக்கும் ராம் மனோஹர் லோகியா அவாத் பல்கலைக்கழக மாணவர்களாகும்.
யோகி நடத்தும் இந்த ஐந்தாவது தீப உற்சவம் வரவிருக்கும் 2022 தேர்தலுக்கு முன்னர் கடைசியாக அவர் நடத்துவதாகும். 2019 இல் 4,10,000 தீபங்கள் எரியவிடப்பட்டன. அதையடுத்த வருடம் 6,06,569 தீபங்கள் எரியவிடப்பட்டன.
சாள்ஸ் ஜெ. போமன்