ஜேர்மனியத் தேர்தல் முடிவுகளின் கேள்வி, யாரைக் ஆட்சியைமைக்க அனுமதிக்கும், சூழல் ஆதரவாளர்களும், லிபரல் கட்சியினரும் என்பதாகும்.
திங்களன்று விடியும்வரை ஆளும்கட்சிகளின் கூட்டணியின் இரண்டு கட்சிகளுக்குள் கத்திமுனைப் போட்டியாக இருந்தது ஜேர்மனியின் தேர்தலின் முடிவுகள். அது அறிவிக்கப்பட்டபோது பிரதமர் பதவியைக் கொண்டிருக்கும் கிறீஸ்தவ ஜனநாயகக் கட்சி தனது கூட்டணிக் கட்சியான சோஷியல் டெமொகிரடிக் கட்சியிடம் சில விகிதங்களை இழந்திருந்தது.
தேர்தலில் மிகப்பெரும் கட்சியாக வென்றிருப்பது பொருளாதார அமைச்சைத் தன்னிடம் வைத்திருந்த சோஷியல் டெமொகிரடிக் கட்சியாகும். அமைச்சர் உலவ் ஷுல்ட்ஸை அக்கட்சி பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தியிருந்தது.25,7 விகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது அக்கட்சி. 24.1 விகித வாக்குகளை அஞ்செலா மெர்க்கலின் கிறீஸ்தவ ஜனநாயகக் கட்சி பெற்றிருக்கிறது.
விளைவாக எழுந்திருக்கும் கேள்வி புதிய பிரதமராகப் போகிறவர் மெர்க்கலின் பின்பு அக்கட்சியின் தலைவராகும் அர்மின் லஷெட்டா என்பதாகும். அதை முடிவுசெய்யப்போவது மூன்றாவது, நாலாவது இடங்களைப் பெற்றிருக்கும் சூழல் பேணும் கட்சியும், லிபரல் கட்சியுமாகும் என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பு.
அக்கட்சிகளில் சோஷியல் டெமொகிரடிக் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் கட்சி சுற்றுப்புற சூழல் பேணும் கோட்பாடுகளை முன்வைத்திருக்கும் கட்சியாகும். 14.6 % வாக்குகளைப் பெற்றிருக்கிறது அக்கட்சி. கிறீஸ்தவ ஜனநாயகக் கட்சியின் ஆதரவுக் கட்சியான லிபரல் கட்சி 11.5 % வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
உலவ் ஷுல்ட்ஸ், அர்மின் சாஷெட் இருவருமே பிரதமராகும் எண்ணத்திலேயே இருப்பதாகப் பேட்டியளித்திருக்கிறார்கள். மூன்றாவது, நாலாவது பெரிய கட்சிகள் இரண்டையுமே தனது பக்கம் இழுக்கும் கட்சியே புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும்.
“நத்தாருக்குள் பேரம்பேசி அரசாங்கம் அமைத்துவிடுவோம்,” என்று உலவ் ஷுல்ட்ஸ் குறிப்பிட, பதிலாக “ஆம் நத்தாருக்குள் அரசு தயாராகிவிடும்,” என்று சொன்னார் அர்மின் சாஷெட் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலாக.
நத்தார் வரை ஜேர்மனியின் புதிய அரசு தயாராகாமல் இருக்குமானால் ஜேர்மனியில் அதி நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை ஹெல்மெட் கோஹ்லிடமிருந்து தட்டிக்கொண்டு போவார் அஞ்செலா மெர்க்கல்.
சாள்ஸ் ஜெ. போமன்