சிறீலங்கா தலைநகர் கொழும்பில் எதிர்க்கட்சிகள் போராட்டம்|பொலிசின் தடைகளும் உடைத்தெறியப்பட்டது
அரச படைகளின் தடைகளை உடைத்தெறிந்து சிறீலங்கா தலைநகர் கொழும்பில் எதிர்க்கட்சிகள் மாபெரும் போராட்டம் ஒன்றை இன்று மாலை ஏற்பாடுசெய்திருந்தது.மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்ட இந்த போராட்டம் வெளி மாவட்டங்களிலிருந்தும் பலர் கொழும்பை நோக்கி படையெடுத்திருந்தனர்.
வாழ்க்கைச்சுமை குறைக்கப்பட வேண்டும்,நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,சேதனப்பசளை,உரப்பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக தீர்வு வேண்டும் போன்ற கோரிக்கைகளோடு மக்கள் கோஷம் எழுப்பியபடி கொழும்பை நோக்கி நகர்ந்தனர்.
அழிக்கப்படும் விவசாயம்,தொடர் விலையேற்றங்கள்,நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி,போன்ற அம்சங்கள் இந்த பேராட்டத்தில் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் கோரிக்கைகள் பலமாக ஒலித்தது.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாச அலுவலகம் இருக்கும் மார்க்கஸ் பெர்னான்டோ மாவத்தையிலிருந்தும் தொடங்கிய போராட்டம் முக்கிய வீதிகளூடாக நகர்ந்த இந்த போராட்டம் நிறைவில் மாபெரும் கூட்டமும் இடம்பெற்றது.
பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆங்காங்கே வீதித்தடைகளும் கடுமையான சோதனைகளும் ஏற்படுத்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டபோதும் போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெற்றது.ஆங்காங்கே மக்களை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோது பொலிசாருடன் வாக்குவதங்களும் ஏற்பட்டிருந்தது.சில இடங்களிலிருந்து தடுக்கப்பட்ட மக்கள் அந்த அந்த இடங்களிலேயே போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது