மலிவுக்குப் பொருள்களை விற்கும்’விஷ்’ ஒன் லைன் சேவைக்கு ஆப்பு!
ஆபத்தான சீனத் தயாரிப்புகளை ஏமாற்றி விற்பதாகக் குற்றச்சாட்டு!
இணையத்தில் பொருள்களைக் கவர்ச்சிகரமான மலிவு விலைகளில் விற்கும்முன்னணி அமெரிக்க நிறுவனம் ‘விஷ்'(wish).
பிரான்ஸின் நுகர்வோரைப் பாதுகாக்கும் பொலீஸ் படை ‘விஷ்’ விற்பனைப் பொருள்களில் பெரும்பாலானவை தரங்குறைந்தவை, ஆபத்தானவைஎன்று பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதன் முறைகேடான இணைய வழி வர்த்தகத்தைத் தடுக்கும் நோக்குடன்-ஐரோப்பாவில் முதல் முறையாக’விஷ்’நிறுவனத்தைக் கூகுள் உட்பட தேடுதளங் கள் மூலம் அணுகுவதற்குப் பிரான்ஸ் தடைவிதித்திருக்கிறது.
“கறுப்பு வெள்ளி” மலிவு விற்பனை நாள்மற்றும் நத்தார் பண்டிகை என்பவற்றைமுன்னிட்டுப் பிரெஞ்சு மக்கள் மும்முரமாக இணையத்தில் பொருள்களை வாங்கத் தயாராகிவரும் சந்தர்ப்பத்தில் “விஷ்”மீதான தடையை அரசு அறிவித்திருக்கிறது.
டிஜிட்டல் தளங்களில் மிகவும் கவரத்தக்கவிதமாகக் காட்சிப்படுத்தப்பட்டு விற்கப்படுகின்ற “விஷ்”(wish) பொருள்களைப்பிரான்சின் “சந்தைப் போட்டி, நுகர்வு மற்றும் மோசடிக் கட்டுப்பாடுக்கான பொது இயக்குநரகம் (General Directorate for Competition, Consumption and Fraud Control – – DGCCRF) ஓராண்டு காலமாக ஆய்வுசெய்து வந்தது.
இலத்திரனியல் சாதனங்கள், மின்சாரக்கருவிகள், விளையாட்டுப் பொருள்கள் போன்றவை மிகவும் தரம் குறைந்த மூலப் பொருள்களில் தயாரிக்கப்படுவதுடன் பெரும் ஆபத்தானவையாகவும் இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
‘விஷ்’ இணையத்தில் கிடைக்கும் சுமார் 140 விதமான பொருள்கள் குறிப்பாகஅழகுசாதனச் சாமான்கள், குழந்தைகளது விளையாட்டுப் பொருள்கள் ஆபத்தானவை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மின்சாரப் பொருள்கள் பல இலகுவில் தீப்பற்றும் அபாயம் உள்ளவை என்றும்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தப் பொருள்கள் எங்கே, எவரால்தயாரிக்கப்பட்டவை என்ற விவரங்கள்அவற்றில் குறிப்பிடப்படுவதில்லைஎன்றும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் சன்பிரான்சிஸ்கோவில் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘விஷ்’ இணைய விற்பனை நிறுவனம் உலகெங்கும் நூறு மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை அது மிக மலிவான விலைகளில் உலகெங்கும் சந்தைப்படுத்திவருகிறது.
‘விஷ்’ நிறுவனத்தின் மோசடிகளை நாட்டின் எல்லைக்குள் அனுமதிக்கமாட்டோம்அதனைத் தடை செய்வோம் – என்றுபிரான்ஸின் பொருளாதார அமைச்சர்புரூனோ லு மேயர் எச்சரித்துள்ளார்.”டிஜிட்டல் வர்த்தகம் என்பது நாட்டின் சட்டங்களை விட மேலானது அல்ல”என்று அவர் கூறியிருக்கிறார்.
ஐரோப்பாவில் முதல் முறையாக விதிக்கப்பட்டிருக்கின்ற பிரான்ஸின் கட்டுப்பாட்டுக்கு எதிராக ‘விஷ்’ நிறுவனம்சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அதன்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.