பால் மாற்றம் செய்தவர்களுக்கான அழகிப் போட்டியில் வென்ற முதலாவது இந்தியப் பெண் சுருதி சித்தாரா.
கேரளாவின் வைக்கொம் நகரைச் சேர்ந்த சுருதி சித்தாரா பால் மாற்றம் செய்துகொண்ட பெண்ணாகும். பால் மாற்றம் செய்துகொண்டவர்களுடைய தன்னம்பிக்கையை உயர்த்தி அவர்களை சமூகங்களில் சகல உரிமைகளுடனும் வாழும்படியாகச் செய்வதற்காகவே இப்போட்டிகள் நடாத்தப்படுகின்றன. இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிலிப்பைன்ஸ், கனடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
Kaleidoscope என்ற சமூகவலைத்தளம் மூலமாகப் பால் மாற்றம் செய்துகொண்டவர்களின் உலகிலிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி எழுதிவருபவர் சுருதி சித்தாரா. நடிகையாக பிரகாசிக்கவேண்டும் என்ற குறியுடன் செயற்பட்டு வரும் சுருதி அந்த வழியிலேயே அழகிப்போட்டிகளில் பங்குபற்றும் ஆர்வத்தைப் பெற்றார்.
சாள்ஸ் ஜெ. போமன்