நட்பும் கற்பும்…

நட்பு…
உயிருக்கு
நிகரானது!
உறவுகளுக்கும் மேலானது!

பள்ளியில் தொடங்கும்…
கல்லூரியில் தொடங்கும்…
அருகிலிருக்கும் மனிதர்களிடம் தொடங்கும்!

தொடக்கம் தொடங்கி முடிவு வரை
தொடர்ந்து கொண்டிருக்கும்!

இதெல்லாம்
நேற்று…

பசும்பாலில் தண்ணீர்போல் இன்று…

மெய்ம்மைக்குள் பொய்ம்மையும்…

தொடக்கம் என்னவோ தூயதாகவே முகம் காட்டுகிறது…

நாள்கள் கடக்கக் கடக்க…
ஒருவரின் பலவீனங்கள் மற்றவருக்கு பலமாகிறது!
அந்த பலமே அவரை
வீழ்த்துவதற்கு வசதியாகிறது!

நட்பின் நிலையறிந்து
தேவைகள் திட்டம் தீட்டுகிறது!

இளகிய மனம்…
தோல்விகொண்ட வாழ்க்கை…
அதற்குள்ள வசதி…
நட்பின் அறிமுகத்தில் காதலாய்…
காதலின் வேடத்தில் காமமுமாய்…

சுகத்துடன்
சொத்துகளையும்
குறி வைத்தே
நட்பு நீள்கிறது….

நட்பு கற்பு போன்றதுதான்…
ஆனால்,
இப்போதெல்லாம்
நட்பென்பது
காமத்திற்கும் காசுக்குமாய்!

உடல் நலிந்தவுடன்
இருப்பு கரைந்தவுடன்
அறுந்துபோன செருப்பாகவே கழற்றி விடப்படுகிறது!

எழுதுவது : பாரதிசுகுமாரன்