ஐ.நா-வுடன் இணைந்து முடக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் நிதியை அவர்களுக்கு உதவ இஸ்லாமிய நாடுகள் உறுதிகொண்டன.

ஞாயிறன்று ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் கலந்துகொண்டன. ஆப்கானிஸ்தான் அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுக் கிடக்கும் பல நூறு மில்லியன் டொலர்களை தலிபான்களின் அரசுக்குப் பெற்றுக்கொடுக்க ஐ.நா-வுடன் இணைந்து செயற்படப்போவதாக அந்த மாநாட்டில் தீர்மானித்தார்கள்.  

அந்த மாநாட்டில் பங்குபற்றிய இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே அந்த வங்கியின் மூலம் அதற்கான ஒழுங்குகள் செய்வது பற்றித் தீர்மானம் எடுக்கப்பட்டது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் அந்த நாட்டின் நடக்கும் ஒரு சர்வதேச நிகழ்ச்சி இதுவாகும்.

குளிர்காலத்தின் பிடியிலிருக்கும் ஆப்கானிஸ்தான் கடுமையான பசி, பட்டிணியை அனுபவித்து வருவதாகவும், நாட்டின் பொருளாதாரம் முழுவதுமாக உடைந்து சிதறியிருப்பதாகவும் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

தலிபான்கள் தமது அரசில் நாட்டின் சகல தரப்பினரையும் இணைத்துக்கொள்ளவேண்டும், பெண்கள், சிறார்களுக்கான பாதுகாப்பையும் உரிமைகளையும் வழங்கவேண்டும், வயதானவர்களுக்கு நல்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளை ஒழுங்குசெய்யவேண்டும் போன்ற கோரிக்கைகள் தலிபான்களிடம் சர்வதேசத்தால் கோரப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் அதையே தலிபான்களிடம் அந்த மாநாட்டில் கேட்டுக்கொண்டன. 

சாள்ஸ் ஜெ. போமன்