சவுதியின் ஜெட்டா நகரில் மீண்டும் தமது அலுவலகத்தைத் திறக்கவிருக்கும் ஈரான்.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமைந்திருந்த ஈரானின் இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்புப் பிரதிநிதிகள் அலுவலகம் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் பூட்டப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பகையால் ஏற்பட்ட அந்த நிகழ்வின் பின்னர் மீண்டும் ஈரானிய ராஜதந்திரிகள் கொண்ட 57 பேராலான குழுவொன்று அந்தக் காரியாலயத்தைத் திறக்க மீண்டும் ஜெட்டாவுக்கு வந்திருப்பதாக சவூதி அரேபியா தெரிவித்திருக்கிறது.

ஈரானிய ஷீயா இஸ்லாமியப் போதகர் ஒருவரைச் சவூதி மரண தண்டனைக்கு உட்படுத்தியதால் 2016 இல் சவூதி அரேபியாவின் தூதுவராலயத்தை ஈரானியர்கள் தாக்கினார்கள். அதையடுத்து முறிந்துபோன இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவை நேர் செய்யவும், மீண்டும் சவூதி அரேபியாவில் தமது தூதுவராலயத்தைத் திறக்கவும் தயார் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் காரியதரிசி பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்