இன்னும் ஆடுகிறது

நொடிக்கவிதைகள்

பளு தூக்கும் வீரன்
கை நடுங்கியபடி
தூக்குகிறான்..
மது கோப்பையை.!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கடற்கரையில் நடைபயணம்..
உப்புத் தென்றலாய்.!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஆலயத்தில் ஒரு இதயத்துடிப்பு..
கைகளின்றி
பிரார்த்தனை.!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எல்லாப் பூட்டுகளையும்
திறந்து விடுகிறது..
கள்ளச்சாவி.!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

@ அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட
ஏலம் விடப்பட்ட பூங்காவில்..
சிறுவர் ஊஞ்சல் இன்னும் ஆடுகிறது.!

எழுதுவது : ப.ஜார்ஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *