கனவாகிப் போனது.!

சமூகக் கவிதை.

கயவர்கள் துகிலுரிக்க
அம்மணமாய்
தெரிகிறது வறுமை.!

அடிபணிந்தே
அக்கிரமத்தை
சுகித்திருக்கிறோம்..
சலனமின்றி..!

அடிக்கடி
சதிகளில் சிக்கிக் கொள்கிறோம்..
நீங்கள் வீசிய
இரும்பு சிலந்தி வலையில்.!

மதிகெட்டுச்
சிரிக்கிறோம்..
பொய்யான
உங்கள் விளம்பரங்களில்.!

உங்களின்
வஞ்சகப் பேச்சால்..
உடலெல்லாம்
முட்காடாய்
உறுத்துகிறது.!

நாங்கள்
அன்புக்காக ஏங்கி நிற்கும் போதெல்லாம்..
கொட்டுவதில்
குளவிகளாய்
நீங்கள்.!

தெளியத்தான்
பிறந்தோம்..
தெளிவாகக் குழப்பி விடுகிறீர்கள்.!

சாதிக்க வந்த
எங்கள் உடல்..
செத்தே தீரும்
அடிமையாய்.!

விடியலுக்காகக்
காத்திருந்த
எங்களின்
சமத்துவம்
*கனவாகிப் போனதென்ன.?*

எழுதுவது : ப.ஜார்ஜ்