தலைக்கு அதிகம் தேவையற்ற வேலை கொடுப்பவரா நீங்கள்? அப்படியானால் முடிகொட்டும் சாத்தியம்

ஏன் முடி உதிர்கிறது ? கட்டுப்படுத்த சில வழிகள்

முடி உதிர்தல் பொதுவாக ஆண்கள் மத்தியில் ஒரு பிரச்சனையாகவே இருந்துவருகிறது. இதனால் நிறைய ஆண்கள் மனஉளைச்சலிற்கு உள்ளாகின்றனா். மருத்துவர்களை நாடுகின்றனா், எத்தனையோ வனகயான மருந்துகளை பயன்படுத்துகின்றனா் ஆனாலும் இதை சீா்ப்படுத்த முடிவதில்லை காரணம் உண்மையில் இது ஒரு நோயல்ல, இதை எந்த வகையான மருந்தாலும் குணப்படுத்த முடியாது. 

முடி உதிர்தலிற்கு முக்கியமாக இரண்டு காரணங்களாகும்

  1. தலைக்கு கிடைக்கின்ற இரத்தம் சரியாக தலைமுடி வளர்ச்சிக்கு பகிரப்படாமை
  2. தலை உஷ்ணமடைகின்றமை.

இவை இரண்டிற்கும் உங்களால் நடைமுறை வாழ்க்கையில் தீா்வு காணமுடியுமென்றால், முடி உதிர்தலை இலகுவாக நிறுத்தலாம். இப்பொழுது முடி மீள்நடுகை போன்ற முறைகள் அறிமுகப்பட்டிருந்தாலும், அவை இயற்கையான முடியைப்போன்று அமைவதில்லை. அத்துடன் முடி பாதுகாப்பிற்காக நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் உங்கள் உடலையும் சமாந்தரமாக மேம்படுத்தும்.

இனி முடி கொட்டுதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்.

மூளைக்கு அதிகவேலை கொடுப்பதனால் தலைக்கு செல்கின்ற இரத்தமானது மூளைக்கே அதிகமாக பயன்படுகின்றது, தலை முடி வளர்ச்சிக்கு சரியாக பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. ஆகவே மூளைக்கு அதிகவேலை கொடுப்பதை குறைத்தனாலும், எண்ணுக்கு அதிகமான தேவையற்ற சிந்தனைகளை குறைத்தனாலும் தலைக்கு செல்கின்ற இரத்தோட்டத்தை சீர்ப்படுத்தி அது வெப்பமாதலை குறைக்கமுடியும். இதனால் முடி உதிர்தல் குறைவடைவதோடு பொடுகு தொல்லையும் இல்லாமல் போகும். தேவையற்ற முதல் நாள் நினைவுகளையும் சிந்தனைகளையும் அடுத்த நாள் துயிலெழும்போது முற்றாக மறத்தல் மிகவும் உசிதமான செயலாகும் (waking up with fresh mind). பகல் வேளையில் இருந்த இடத்திலேயே நித்திரை செய்தல் சிரசை குளிர்விக்கின்றது. இதனால் முடி உதிர்வது குறைவதோடு முடி வளரவும் தொடங்கும். ஆகவே தேவையில்லாமல் தலைக்கு வேலை கொடுப்பதை நிறுத்துங்கள். எப்போதும் மனம் இலகுவாக இருக்கட்டும். இதன் பிரதான நேக்கம் தலையை குளிர்மையா வைத்திருப்பதே.

இரண்டவதாக உடலில் பித்தத்தன்மை அதிகமானால் முடி கொட்டும் எனவே உடலில் பித்தத்தின் அளவை கட்டடுப்படுத்தல் மிக முக்கியமானதாகும். உடலில் பித்தத்தின் சமநிலை உணவுச்சமிபாட்டு சீராக நடைபெறவும் உதவுகின்றது. பித்தத்தை எவ்வாறு கட்டடுப்படுத்தலாம்? சரியான கால இடைவெளிகளில் பேதி மருந்து உட்கொள்ளல் இதை கட்டடுப்படுத்த மிகவும் சரியான வழியாகும். பேதி மருந்து உட்கொள்ளும் போது ஆங்கில மருந்திற்கு பதிலாக பக்கவிளைவுகளற்ற இயற்கையான மருந்தை பயன்படுத்தல் சாலச்சிறந்தது. அதில் ஒரு இயற்கையான மருந்துதான் கடுக்காய் பொடி, இதைபற்றியும் பேதி மருந்து பாவிக்கும் முறைபற்றியும் எதிர்காலத்தில் வரும் குறிப்புகளில் விபரமாக தருகின்றேன்.

இவற்றைவிட இன்னும் சில இலகுவான வழிகள் முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவுகின்றது. குளிக்கும்போது அடிக்கடி தலையில் குளிக்கவேண்டும் இதனால் தலையின் உஷ்னம் குறைவடைகிறது. குளிர் நீரில் குளிக்கும் போது முதலில் தலையில் நீரை ஊற்றி குளிக்கவேண்டும். சூடான நீர் எனில் முதலில் கால் பக்கமாக நனைதை்த பின்னர் தலையில் குளிக்கவேண்டும். இவ்வாறு செய்தல் உடல் வெப்ப சமநிலையை பேணுகின்றது. வாரம் ஒரு முறை உடல் முழுவதும் எண்ணை தோய்த்து குளிப்பது மிகவும் நன்று. சிறிது நேரம் சூரிய ஒளியில் நனைதைல் விசேட அம்சமாகும். தலைக்கு நல்லெண்ணை தேய்த்து குளிக்கவேண்டும். குளிக்கும்போது தலையை நன்றாக தேய்த்துவிடுதல் வேண்டும்.

கடுகை அரைத்து சூடான ஒலிவ் எண்ணையில் கலந்து தலைக்கு வைத்தால் தலை முடி நன்றக வளர்வதற்கும் தலையில் உஷ்ணம் சீரடையவும் உதவி செய்யும்.ஆனால் செயற்கையான இரசாயன மருந் து களை பயன்படுத்துவது முடி உதிர்தலிற் ஒரு தீர்வாகாது பதிலாக முடி உதிர்தல் அதிகமாவதோடு நரை முடியும் தோன்றும். மேலதிகமாக யோக பயிற்சி செய்தல், தியானம் மேற்கொள்ளல், மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்றன இரத்தோட்டத்தை சீராக்கி உடல் உஷ்ண நிலையை போணுகின்றது இதனால் தலையின் உஷ்ணம் குறைவடையும்.  இறுதியாக நேரம் கிடைக்கின்ற வேளைகளில் ”ம்ம்” என்ற ஒலியை எழுப்புங்கள், இது புதிதாக முடி வளா்வதற்கு உதவும். இவ்வாறு மேற்குறிப்பிட்ட இலகுவான வழிகளை பின்பற்றி உங்கள் முடியை பாதுகாத்துக்கொள்ளலாம். எந்த வழிமுறைகளை கையாள்வது என்றாலும் உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது எப்போதும் முக்கியமாகும்

எழுதுவது : துன்னையூரான் (ஜனா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *