சர்வதேச ரீதியில் வக்ஸேவ்ரியாவின் இடத்தைக் கொமிர்னாட்டி 2022 இல் கைப்பற்றவிருக்கிறது.
சர்வதேச ரீதியில் வறிய, நடுத்தர வருமான நாடுகளுக்கான கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்துதவ ஏற்படுத்தப்பட்ட அமைப்பு கோவாக்ஸ். உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் அது நிர்வகிக்கப்படுகிறது. வசதியுள்ள நாடுகள் இலவசமாகவும், மிகக்குறைந்த விலையிலும் கோவாக்ஸ் அமைப்புக்குக் கொடுத்து வருகின்றன. கோவாக்ஸ் இதுவரை பெரும்பாலும் அஸ்ரா செனகா நிறுவனத்தின் வக்ஸேவ்ரியா தடுப்பு மருந்தையே பெற்று விநியோகித்து வந்தது.
அதன் காரணம் பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் கொமிர்னாட்டி தடுப்பு மருந்து அதிகம் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்படவேண்டும் என்பதால் ஏற்பட்ட விநியோகப் பிரச்சினைகள், தேவையான அளவில் தயாரிக்கப்படாமை, தயாரிக்கப்பட்டவைகளை ஏற்கனவே வசதியுள்ள நாடுகள் வாங்கிவிட்டவை ஆகும். வக்ஸேவ்ரியா உலகின் தடுப்பு மருந்துத் தயாரிப்புக்களில் முன்னணி நாடான இந்தியாவில் தயாரிக்கப்பட்டதால் அவை தேவையான அளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகும்.
கோவாக்ஸ் இதுவரை 150 நாடுகளுக்கு சுமார் 600 மில்லியன் தடுப்பு மருந்தை வினியோகித்திருக்கிறது. அவற்றில் சுமார் 220 மில்லியன் வக்ஸேவ்ரியாவும் 160 மில்லியன் கொமிர்னாட்டியும் ஆகும்.
வரும் மார்ச் மாதத்தில் மேலும் 150 மில்லிய கொமிர்னாட்டி தடுப்பு மருந்துகள் கோவாக்ஸ் அமைப்புக்குக் கிடைக்கும். அத்துடன் பைசர் பயோண்டெக் நிறுவனமே அவர்களுக்குத் தடுப்பு மருந்துகளை அதிகமாகக் கொடுக்கும் நிறுவனமாகிவிடும் என்று தெரியவருகிறது. வரும் வருடத்தில் 470 கொமிர்னாட்டி தடுப்பு மருந்துகளும் 350 வக்ஸேவ்ரியா தடுப்பு மருந்தும் கோவாக்ஸுக்குக் கிடைக்கவிருக்கின்றன.
உலகளவில் பல நாடுகளும் எதிர்பார்ந்திருந்தபடி அஸ்ரா செனகா நிறுவனத்தால் தடுப்பு மருந்துகளை வினியோகிக்க முடியவில்லை. அவர்கள் தயாரிப்புப் பிரச்சினைகளை எதிர்கொண்டதுடன், இந்தியா தனது தயாரிப்பை ஏற்றுமதிக்குத் தடையும் செய்தது. விளைவாக, கோவாக்ஸ் திட்டம் பாதிக்கப்பட்டது. வறிய நாடுகள், முக்கியமாக ஆபிரிக்க நாடுகள் இதுவரை மிகக்குறைந்த அளவிலேயே தடுப்பு மருந்துகளைப் பெற்றிருக்கின்றன. அத்துடன், அவற்றில் பல மில்லியன் காலங்கடந்தே வந்திருந்ததால் குப்பையாக்கப்பட்டன.
வக்ஸேவ்ரியா தடுப்பு மருந்தே 2022 இல் பெருமளவு கிடைக்கவிருப்பதால்
கோவாக்ஸ் தனது வினியோகச் சங்கிலியின் அமைப்பையும், பாதுகாக்கும் இடங்களையும் மாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. காரணம் அது அதிக குளிரில் பாதுகாக்கப்படவேண்டியது என்பதாலாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்