கிராமிய மின்னல்

ஊஞ்சல் ஆடுவது
கிராமத்து மின்னலா
வழி தவறி வந்த தேவதையா!

பாவாடை தாவணியில் பறக்கிறாளே
பருவப்பாவை!

வண்ணங்களைக் குழைத்த பாவாடை தாவணி அழகுக்கு
அழகு சேர்க்கிறதே வண்ணப் பைங்கிளியே!

ஊஞ்சலில் தோகை விரித்து ஒரு வண்ண மயில் ஆடுகிறதோ!

அலை போல ஆடும்
உன் கருங்கூந்தல்
காண்பவர இதயத் துடிப்பை அதிகரிக்குமே அழகான கிராமத்து அத்தியாயமே!

கந்தர்வ லோக பாரிஜாத மலர்க் கூட்டமே இங்கு வந்து விட்டதோ!

வானவில் புருவங்கள்
இடையில் அழகிய சிவந்த திலகமும்!

கண்ணில் இழைத்திட்ட கண் மையும் அழகை பறை சாற்றுகிறதே
பருவ மங்கையே!

அழகை மேலும் கூட்டுகிறதே நெற்றிச்சுட்டியும் மூக்குத்தியும்!

உடலைத் தழுவிக் கொள்ள போட்டி போடுகிறதோ
கழுத்தில் உள்ள அணிகலன்கள்!

உன் இடுப்பைச் சுற்றி வளைய வருகிறேன் என்று கர்வப்படுகிறது ஒட்டியாணம்!

காலில் சதங்கை உன் ஆட்டத்தில் தாளம் போடுகிறதே!

இரு கைகளும் ஊஞ்சலைப் பிடித்திருப்பதால் சிவந்து விடப் போகிறது
சிங்காரப் பெண்ணே!

மாலைக் கருக்கலாகி விட்டது உலா வரும்
கந்தர்வர்கள் கண்களில் படாமல் பாங்காய் வீட்டுக்கு சென்று விடு என் கிராமத்துக் கண்மணியே!

எழுதுவது : விஜயலட்சுமி