இன்னமும் அந்த அண்ணன் எங்கே எல்லாம் போகணுமோ!!!

சைக்கிளை வேக வேகமாக மிதித்து கொண்டு இருந்தேன்.அப்பொழுது என்னைவிட வேகமாக வந்து குறுக்கே கட்டையை போட்ட மாதிரி
எனக்கு தெரிஞ்ச கலா அக்கா வந்து வழியை மறிச்சு நின்னுச்சு,எனக்கு கோபம் தான் இப்பவே மணி 12,அந்த மளிகை கட அண்ணாச்சி சீக்கிரம் வாலே இல்லேனா வேற யாராசியும் வேலைக்கு வைசுடுவேன் சொன்னாரு என்று நினைத்து கொண்டே சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி என்ன னனு கேட்டேன் .
குமார் எனக்கு ஒரு உதவி செஞ்சே ஆகோனும்,நான் வாக்கு கொடுதுபுட்டேன் ன்னு சொல்லுது
எனக்கு பக்குன்னு ஆச்சு
என்ன உதவி ன்னு கேட்டேன்.
இந்த அக்கா என்கிட்ட உதவின்னு கே ட்டது இல்ல நல்ல அக்கா!!🧐 வேற …..

சொல்லு ன்னு சொன்னேன்

என்ற பக்கத்து ஊட்டுல ஒரு அம்மாவும் பையனும்
மட்டும் தான் இருக்காங்க
அந்த பையனுக்கு பொண்ணு பார்த்து கிட்டு இருக்காங்க இப்போ பார்த்து இப்படி ஆகிடுசேண்ணு அக்கா கண்ணீர் விட்டுசு
எனக்கு ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சு
மேல சொல் லூக்கா என்ன ஆச்சு
அந்த பையன் வெளிய லாக்டவுனு முடிஞ்சு வேலையை பார்க்க போன இடதில்ல ஆக்சிடென்ட் ஆகிடுச்சு கொமாரு எனக்கு ரொம்ப பாவாம போய் டுச் சு
மாவு கட்டு போட்டு படுதுறுக்கு
டாக்டர் சொல்லிட்டாரு
நல்ல நடந்தா மட்டும் வாங்க
சும்மா எல்லாம் இங்க வராதீங்க ன்னு
கொரோனா நேரத்தில்…
இப்போ அத என்கிட்ட சொல்லுச்சு யாராவது நடக்க வைக்க உதவி செய்வார்க ளா என்று என்கிட்ட கேட்டுசா
உடனே உன் ஞாபகம் தன் வந்துச்சு(நம்மல நினைச்சாலே இ.வா ன்னு தெரியுமோ!!)
உடனே ஓடியாந்துட்டேன் ன்னு சொல்லுச்சு
நான் யோசனையுடன் நிக்கறத பார்த்துட்டு
ரொம்ப பயந்துறுசு எங்கே வரமா போய்டுவனோ ன்னு…
சரி சரி வரேன் போங்க எந்த வூடு ன்னு கேட்டேன்
எங்க பக்கத்து தெரு தான் ரொம்ப நல்ல மனசு?! சொல்லுச்சு
நானும் போனேன்
அங்க போன அந்த அம்மா வெளிய ஓடிவந்து என் கையை புடுச்சுகிட்டு ஒரே அழுகை
நீங்கதான் இந்த கொரோனா காலத்துல வந்த தெய்வம் ன்னு சொல்லுச்சு
எனக்கே ரொம்ப சங்கடமா போய்ருச்சு
சரி உள்ளே போலாம் ன்னு வீட்டுக் குள்ளே போனோம்
அந்த பையனா பார்த்தா எனக்கே கஷ்டமா போய்டுச்சு
சரி நா உங்களுக்கு உதவி செய்ய றேன் ன்னு சொன்னேன் அப்போ கலக்கவும் அந்த அம்மாவுக்கும் கண்ணுல தண்ணி வந்துருச்சு.
சரி நாளையிலிருந்து வந்துறேண்ணு சொல்லிட்டு கிளம்புனேன்
அப்போ அந்த அம்மா சொல்லுச்சு
நீ எங்களுக்கு சும்மா எல்லா உதவி செய்ய வேண்டாம்
ஒருவாரம் ஒருமணி நேரம் வந்தா போதும்
மணிக்கு 100/_ வாங்கிக்கோ ன்னு சொன்னாங்க
நான் வேண்டாம் ன்னு சொன்னதுக்கு
கலா அக்காவும் அந்த அம்மாவும்
வற்புறுத்தி சந்திக்க வெச்சாங்க.
சரின்னுட்டு நானும் நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
முதல் நாள் வந்து அந்த பையனை கைத்தாங்கலாக தூக்கி வெச்சு
உட்கார வெச்சு நடக்க சொன்னேன்.அதுக்கு அந்த பையன் எனக்கு தல
சுத்துன்னா ன்னு சொன்னான் சரி இன்னைக்கு கொஞ்சம் மெதுவாக நடக்கலாம் ன்னு சொன்னேன்.
கொஞ்சம் கொஞ்சமா எட்டு எடுத்து வச்சான் அதுகுள்ள ஒரு மணி நேரம் முடுஞ்சு போச்சு,
சரி நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்..
மூனுநாள் இப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவன கைத்தாங்கலாக நடக்க பழகினேன்
அதுகுல்ல நாம சொந்த கத, சோக கதையெல்லாம் கேட்டு ரொம்ப பழகியாச்சு…
ஆதுகுள்ள அந்த அம்மா ரெண்டு நாள் எனக்கு காபிதண்ணிகூட குடுதுச்சு.
தினதோரும் பணம் குடுப்பதுதான் பேச்சு ஆனா அந்த அம்மா ஒட்டுக்கா குடுகறேன் ன்னு சொல்லுச்சு நானும் தலையாட்டி கொண்டேன்.
கடைசிநாள் வந்தப்ப அந்த அம்மா பையனா பார்த்து கண்ணசைச்சத நான் பார்த்துட்டேன்
இன்னைக்கு வேண்டாம் நாங்க வெளிய கிளம்பரோமே ன்னு சொல்லுச்சு சரி நானும் நடக்க பழகி ஆ ச்சு நான் இனிமேல் வரல,இதுவரைக்கும் வந்ததுக்கு பணம் குடுங்கன்னு கேட்டா அந்த அம்மா பாட்டுக்கு சமையல் ரூம் பக்கமா காது கேக்காத மாதிரி போகுது எனக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு
என்னப்பா இதெல்லாம் அந்த பையனை கேட்டா
அவன் அவங்க அம்மாவ பார்த்து கேட்டானே ஒரு கேள்வி
“அம்மா இன்னும் அந்த அண்ணன் இன்னும் எங்கேயெல்லம் போகணுமோ”
எனக்கு அப்படியே தலை சுத்துது
ஹமாம் சோப் விளம்பரம் அப்படியே கண்ணு முன்னாலே வருது.
அப்படியும் இருக்காங்க
இப்படியும் இருக்காங்க உலகத்துல ன்னு
பெரிய கும்பிடா போட்டுட்டு நடையகட்டிட்டேன்
இனி ஒருத்தனுக்கு
பாவம் பார்க்க கூடாது
எங்க இந்த கலா அக்கா இரு வரேன்……

எழுதுவது : திருமதி சஷி ராஜா