கலைவாணி தரும் கல்விச்செல்வம்| ஒழுக்கமுடன் ஒங்கச்செய்வோம்

கல்வி கற்றலுக்கு அடிப்படை ஒழுக்கமே. ஒழுக்கம் இருந்தால் கல்வியை எளிதாக கற்றுவிடலாம் என்ற புரிதல் எமக்குள் வந்துவிட்டாலே அது எம்மை வழிப்படுத்தத்தொடங்கிவிடும்.

உன்னை யார் கைவிட்டாலும் நீ கற்ற கல்வி என்றும் கைவிடாது என்று சொல்வார்கள். சமுதாயத்தில் வாழ கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை பல சான்றோர் வாழ்வு எமக்கு உதாரணமாகக் காட்டுகிறது. கல்வி என்பது அனுபவத்தை தருவதோடு அந்த கல்வி பிறருக்கு பயனுள்ளதாக இருக்க அமைத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாகும். கல்வியின் அழகில் ஒன்று கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுப்பதுதான்.

ஆண்கள் கல்வி கற்றால் சமுதாயத்திற்கு மட்டும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் கல்வி கற்றால் குடும்பத்திற்கும் சமூகத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்வி கற்றதாகும் என்று சொல்வார்கள்.

எதை மறந்தாலும் கற்ற கல்வியை மறத்தல் கூடாது. அது எப்போதும் எந்த வேளையிலும் நமக்கு சகவாழ்வில் கைகொடுக்கலாம். மனதிற்குள் இருளை அகற்றி அறிவுச்சுடர் ஒளியை கொடுப்பது கல்வி.

கலைமகள் சரஸ்வதி கல்வியை ஏடு வைத்து கற்றுக் கொண்டுதான் இருக்கிறாள்.

கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு வாழ்க்கையில் கல்விக்கான தேடல் மிக அவசியம்.

பிச்சை எடுத்தாவது கல்வியைப்பெற திடசங்கற்பம் கொள்வர் சிலர் .அன்னப் பறவை பாலையும் நீரையும் வைத்தால் நீரை நீக்கி விட்டு பாலை மட்டும் பருகும் அன்னத்தைப் போல நல்ல நூல்களைத் தேடி கல்வி கற்பது அறிந்தெடுத்து தெரிந்தெடுத்து கற்று எம்மை அறிவேற்றுவதற்கு ஒப்பாகும். அதே கல்வியை ஆராய்ச்சி வழி தேடுவது எம்மை இன்னும் மேலான இடத்துக்கு அழைத்துச்செல்லும். சிறந்த கல்விமான்கள் பின்பற்றும் வழிகளில் இதுவும் ஒன்றுதான்.

கல்வி கற்பது “தவம்”. கல்வி கற்பிப்பது “வரம்” கற்ற கல்வியுடன் ஒழுகுவது கற்ற கல்விக் அழகாகும்.
கல்வி செல்வம் நீ எதை இழந்தாலும் கல்வி மூலம் அனைத்தையும் பெற்று விடலாம். அதுமட்டுமல்லாமல் கல்வி தாய்மொழியில் கற்கப்படுமிடத்து அது ஒருபடி மேலாகவே எம்முள் நிறைந்துவிடும். புரிதல் நிறைந்த கல்வியாக எம்முன் மிளிரும்.

எழுதுவது : மா.நந்தினி , ஆய்வியல் நிறைஞர்( தமிழ்)
சேலம்.