சைப்பிரஸில் டெல்டா + ஒமெக்ரோன் திரிபுகளாலான டெல்டாகிரோன் திரிபு ஒன்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
சைப்பிரஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டெல்டா + ஒமெக்ரோன் திரிபுகளானான கொவிட் 19 கிருமியை அடையாளம் கண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். டெல்டாகிரோன் திரிபு என்று அதை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சுமார் 25 பேருக்குப் பரவியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் டெல்டாகிரோன் திரிபு அதன் அடிப்படைக் கிருமியைவிட மோசமான விளைவுகளைக் கொடுக்கக்கூடியதா என்றும் பெருமளவில் பரவக்கூடியதா என்பது பற்றியும் ஆராய்ந்துவருவதாக லியோண்டிரியோஸ் கொஸ்திரிக்கிஸ் குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்