உழவே தமிழர் உயர்வு
கோழியது கூவையில
கடிகாரம் காணாமல் போச்சு
எழுந்து நானும் பார்க்கையில முட்டி வலி மறந்தே போச்சு
வயல் என்னை வரவேற்கையில வயிறு பசியும் தூரமா போச்சு
வலிய நானும் பார்க்கையில பசியும் பறந்தே போச்சு
பஞ்சத்தின் வருகையில கஞ்சியும் கரைந்தே போச்சு
பட்டினி யாரையும் போடவே இல்ல
பரிமாறிய எனக்கு பந்தியே போச்சு
கண்ணீருடன் நிற்கையில கடைவீதிக்கு என் காலும் போச்சு
நான் சோறு கொஞ்சம் கேக்கையில கையில காசு இல்லை என்பதே மறந்து போச்சு
வெயில் மழையின்னு ஒதுங்கி நானும் நிற்க்கவே இல்ல
ஊறது பட்டினியாகும்கிற நினைப்புல
பட்டினி என்னை பதம் பார்க்கையில என் வாழ்க்கையும் கேள்வி குறியாச்சு
உழவனின் வாழ்வடா இது உழவனின் வாழ்வடா
உழவே தமிழர் உயர்வு என்பதை மறக்கலாகுமோ
மறந்தால் உன்னால் உணவை உண்ணலாகுமோ
உழவனின் விதை நெல்லோ விளைய விரைந்து வருமே உன் பசியாற்ற
இது ஒன்று தகுமே நீ உழவனை போற்ற
உழவனோ பார்புடிக்க விதையெல்லாம் வீழ்ந்தனவே வியர்வையில் ஆம் உழவனின் வியர்வையில்
வெரசா எழுந்தனவே
படியாற்றியவனின் பெயர் அறியா
படைப்பாளியின் முகம் அறியா
பசிபோக்கும் பரம்பொருளே உழவனாய் உதித்து உயர்வானதே
உள்ளமெல்லாம் பொங்கிடுதே
உழவனின் புகழ் பாடுதே
பொங்கும் திருநாள் போதாதே
பூமிதாயின் மகன் உழவனின் புகழ் பாட
நாம் பசியாரும் ஒவ்வொரு கணமும் உழவனின் மார்பில் சுரந்தவையே
உழவனின் வாழ்வு உயரட்டும்
எழுதுவது : கவிதாயினி அ.சாந்தினி
சேலம் மாவட்டம்.