கோலாலம்பூரில் புத்தகப் பூங்கா 2022
மலேசிய நாட்டு எழுத்தாளர்களின் நூல்களைப் பரவலாக்கும் நோக்கோடு விற்பனைச் சந்தையை உருவாக்கவும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், முதன் முறையாகப் புத்தகக் காட்சியைக் கோலாலம்பூரில் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் திரு.பெ.ராஜேந்திரன் கூறினார்.
1.5.2022-ஆம் தேதி கோலாலம்பூர் பிரிக்பீல்ட்சில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ மண்டபத்தில், காலை 10 மணி முதல் மாலை 6 வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும்.
இந்த புத்தகக் காட்சி என்பது மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை அறிமுகப்படுத்தும் அதேவேளையில், நம் உள்நாட்டு நூல்களுக்கு ஒரு விற்பனை சந்தையை ஏற்படுத்தி(Platform) பொது வாசிப்பாளர்களிடம் கொண்டு சேர்ப்பது முதன்மை நோக்கம் ஆகும்.
பொது மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கிலும் உள்நாட்டு தமிழ் புத்தகங்களைப் பரவலாக பொது வாசிப்பாளர்களிடம் கொண்டு சேர்பதிலும் இந்த மலேசியத் தமிழ் புத்தகக் காட்சி 2022 பெரும் பங்காற்று வேண்டும் என்பது முக்கியமான நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் புத்தகளுக்காக நடத்தப்படும் புத்தகக் காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.