1963 இன் பின்னர் முதலாவது தடவையாக மகாராணி எலிசபெத் II பிரிட்டிஷ் பாராளுமன்ற வருடத்தை ஆரம்பித்து வைக்கவில்லை.

பாரம்பரியப்படி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் புதிய அலுவலக ஆண்டு இன்று ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட தினத்தில் மகாராணி எலிசபெத் பாராளுமன்றத்தை கோலாகலமாக ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்துவது வழக்கம். பதவியிலிருக்கும் அரசால் எழுதப்படும் அந்த உரையில் அவர்கள் வரவிருக்கும் அலுவலக வருடத்தில் எப்படியான சவால்களை நாடு எதிர்நோக்குகிறது, அவற்றை பிரிட்டிஷ் அரசு எப்படி எதிர்கொள்ளும் போன்ற விபரங்களை சுருக்கமாகக் கொடுக்கப்படும்.

இன்று செவ்வாயன்று குறிப்பிட்ட விழாவில் தன்னால் பங்குபற்ற முடியாது என்று நேற்று மகாராணி அறிவித்தார். 96 வயதான மகாராணி சமீப காலத்தில் பல உத்தியோகபூர்வமான நிகழ்ச்சிகளிலும் பங்குபட்டாமல் ஒதுங்கிக்கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம் அவரது உடல்நிலை பலவீனமாகியிருப்பதாகும். 

“மகாராணியார் அடிக்கடி நடமாடுவதில் பலவீனங்களுக்கு உண்டாகியிருக்கிறார். அதனால் அவரது மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் இவ்வருடப் பாராளுமன்றத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டார். மகாராணியின் வேண்டுதலுக்கு இணங்கி இளவரசர் சார்ள்ஸ் இவ்வருடம் பாராளுமன்றத்தில் அரசின் பிரகடனத்தை வாசிப்பார்,” என்று அரண்மனை வட்டாரத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.

தனது 70 வருடகால ஆட்சியில் மகாராணி 1959, இலும் 1963 இலும் மட்டுமே பாராளுமன்றத் திறப்பு விழாக்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்திருக்கிறார். அவ்விரண்டு தருணங்களிலும் அவர் இளவரசர் ஆண்டிரூ, இளவரசர் எட்வர்ட் ஆகியோரைப் பிரசவிக்கவிருந்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *