தாய்மை |குட்டிகதை

கேரல் சாந்தி
பிறப்பால் கிரிஸ்துவர், அவர் மணமுடித்தவர் ஒர் தமிழர். தமிழராய் தமிழால் ஈர்க்கப்பட்டு வாழ்கிறாள். அவள் கெட்டிக்காரி.அன்பு நிறைந்தவள். தைரியசாலி ,எதையும் முன் நின்று செய்து முடிப்பதில் அவளுக்கு நிகர் யாரும் இலர் எனலாம். தன் குடும்ப பொருப்புகள் கண்ணின் இமைப் போல் காப்பவள். வீட்டில் அனைவரையும் அவளே வழி நடத்தினாள்.

இளமை காலம் ,குழந்தை ,பணி என ஓடி மறைந்தது.பிள்ளைகள் வளர்ந்து பெரியவரானார்கள் .
பள்ளி படிப்பை முடித்து பட்ட படிப்பை
முடித்தனர். மூவரில் ஒருவர் மணமுடித்து தனி குடித்தனம் போனார், மீதி இருவருல் ஒருவர் பணியில் ஈடுபடலானார். கடைகுட்டிப் பயல் இன்னும் மேல் நிலை படிப்பை தொடரலானார்.
இதற்கிடையில் இவளுக்கு வயது ஒடினதே தெரியவில்லை. தன் கணவனுக்கு அறுபது ஆனதும் ,வேலை ஓய்வு பெற்று வீட்டில் முடங்கலானார். சிறிது சிறிதாக வைத்திருந்த சேமிப்பு கரைய தொடங்கியது.
கடைகுட்டி விமானியாக படிக்க ஆசைப்பட்டான்.
அவன் ஆசையை நிறைவேற்ற எல்லா பணத்தையும் எடுத்து
படிக்க வைத்தாள்.
அவன் பிலிபைன்ஸ்
பரக்கலானான்.

கேரல் இளமை காலத்தில் நல்ல நிலைமையில் சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தவள். முதுமையில் படக் கூடாத துன்பம் எல்லா வற்றையும்
அனுபவிக்கிறாள்.
மூத்தவன் நன்றி கடானுக்காக வந்து உதவிகரம் நீட்டவில்லை. இளயவன் தானுண்டு தன் வேலையுண்டு என ,இருப்பது தெரியாது வாழ்கிறான் .உடன் இருந்தும் மருந்துக்கு கூட உதவியதுயில்லை.
கடைகூட்டிக்காக வீட்டில் இருந்தே உணவுகளை சமைத்து விற்க தொடங்கினாள் கேரல். இத்தொழில் சற்று கை கொடுத்தது. சற்று சிறமத்தில் இருந்து விடுப்பட்டால்,
நிம்மதி பெருமூச்சை
விட்டாள்.
இந்த வயதான காலம்
பொல்லாதது .எதற்கும் கவலை படாமல் துணிச்சலுடன் நின்று
போராடும் குணம் உடையவள் கேரல். அப்படி பட்ட அவளையே வாழ்க்கை பயணம் புறட்டி போட்டதுதான் வேதனை . பெண் இன்னும் எத்தனை நாட்களுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பாள், காலா காலமும் இவர்கள் துன்பம் தொடர்கதை தானா?
வாழும் போது நல்ல வாழ்க்கை வாழ்ந்து மடிவது இல்லை ஏன்?
என பல கேள்வி கணைகளோடு படுக்கையில் படுத்து
முனகிக்கொண்டிருந்தாள் கேரல்.

பாவம் கேரல் நோய் வாய்ப்பட்டு கிடக்கிறாள்.
அவளை கவனிக்க ஆள் இல்லை தனி அரையில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறாள்.
யாரோ வராங்க ,யாரோ போராங்க அவள் அவளாக இருக்கிறாள்,
தன்னை தொலைத்து

எழுதுவது : இலட்சுமி
ஐயாக்கண்ணு
கோலாலம்பூர்
மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *