சிறப்பாக நடந்தேறிய Hartleyites walk

ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் (Hartleyites Sports Club UK) ஏற்பாடு செய்யப்பட்ட Hartleyites Walk (ஹாட்லியைற்ஸ் நடை) மில்ரன் கீன்ஸ் நகர அழகிய Willen Lake/விலென் ஏரி பூங்காவில் சிறப்பாக நடந்தேறியது.

ஜூன்மாதம் 2ம் திகதி நடைபெற்ற இந்த நடை நிகழ்வு , அன்றையநாள் மொத்தமாக குறைந்தளவு 10 km என்ற இலக்குடன் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 18000 அடிகளுடன் 13 km பூர்த்தி செய்யப்பட்டு நிறைவடைந்தது.

உடல் உறுதியையும் மன நிறைவையும் தரும் நடைப்பயிற்சியை பலருக்கும் எடுத்துச்செல்லும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த இந்நிகழ்வு இடம்பெற்றது.

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் மட்டுமல்லாது பெண்கள் குழந்தைகள் எனப் பல ஹாட்லியைற்ஸ் விளையாட்டைக்கழக நலனவிரும்பிகள் பலரும் உத்வேகமாக இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் நிறைவில் 2020 மற்றும் 2021 ம் ஆண்டு உலக அளவில் பலரும் பங்குபற்றி சிறப்பித்த HSC UK 100 KM challenge இல், ஐக்கிய இராச்சியத்தில் முன்னிலையில் நிறைவு செய்த பலருக்கும் HARTLEYITES SPORTS CLUB UK – 100K CHALLENGE பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வரும் காலங்களில் ஐக்கிய இராச்சிய முன்னணி நகரங்களிலும் , உலகின் பல நகரங்களிலும் Hartleyites Walk ஏற்பாடு செய்வதற்கு பலரின் கருத்துக்களும் ஆதரவும் கிட்டி வருகிறது எனவும் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *