புகழுடன் நிலைத்து நிற்கும் தமிழர் பண்பாடு

முன்னுரை :
இந்திய நாட்டின் கலாச்சாரத்திற்கு எப்போதும் உலகெங்கும் தனி வரவேற்பு இருக்கும் . தமிழரின் கலாச்சாரம் மொழி , இசை , நடனம் , வீட்டிற்கு வரும் விருந்தினரை நன்கு உபசரித்தில் , தத்துவம் , உடைகள் , போன்றவை தமிழ்நாட்டின் மாறாத கலாச்சாரம். தமிழ்நாட்டில் தமிழரின் கலாச்சாரத்தை பற்றி ஆய்வு நடத்த தமிழகத்தில் உள்ள கோவில்களே முதலில் உள்ளன . தமிழர்கள் நம் பண்பாடுகளை ஓவியக்கலை , கட்டிடக்கலை , நடனக்கலை , இசைக்கலை , இலக்கியக்கலை போன்ற ஒவ்வொரு கலைகளிலும் தனித்துவம் பெற்ற நிகழ்வுகளை நம் தமிழர்கள் இங்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அத்தகைய தமிழரின் பண்பாடு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

சங்க தமிழ் அறிமுகம் :
பத்துப்பாட்டு எட்டுத்தொகையும் ஆகிய பதினெண்மேற்கணக்கு நூல்களும் சங்க இலக்கிய நூல்களும் என்று அனைவராலும் போற்றப்படுகிறது . சங்க இலக்கியம் என்ற தொகுப்பில் இருக்கும் பாடல்களின் காலம் கி. மு . 500 முதல் கி . பி . 100 வரை என்று கூறுவர். சங்க இலக்கியங்களை முதழ்ச் சங்கம் , இடைச் சங்கம் , கடைச் சங்கம் என்று மூன்று வகைகளாக பிரித்துள்ளனர் . பழந்தமிழ் நாட்டில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன . மதுரை , கபாடபுரத்தில் முதல் இரண்டு சங்கங்களும் தோன்றி மறைந்த பின் , பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது . அத்தகைய மூன்றாம் தமிழ்ச் சங்க நூல்களே எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும்.

தமிழரின் வீரம் :
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் காதலையும் , வீரத்தினையும் , தன்னுடைய இரண்டு கண்களாக பார்த்து வந்தனர் . அந்த இரண்டினையும் தான் அகம் , புறம் என்று பிரிக்கப்பட்டுள்ளது . அகத்திணைகள் குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , என “அன்பின் ஐந்திணை” ஆக பிரிக்கப்பட்டுள்ளது . புறத்திணைகள் வெட்சி , கரந்தை , வஞ்சி , காஞ்சி , நொச்சி , உழிஞை , தும்பை , வாகை , பாடாண் போன்றவைகள் ஆகும் .

நன்றி மறவாத தமிழர்கள் :
தமிழர்களிடம் எப்போதும் இருப்பது மற்றவர்கள் செய்த நன்றியை மறக்காமல் இருப்பது தான் . தமிழ் நாட்டில் நன்றி மறந்த தமிழர்களை பார்ப்பது அரிது .

தமிழர்களின் விருந்தோம்பல் :
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நன்கு உபசரித்து அனுப்புவது தமிழரின் பண்பாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. வீடு தேடி பசி என்று வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உடனே உணவளிக்கும் பழக்கத்தினை கொண்டவர்கள் தான் தமிழர்கள். அக்காலத்தில் அசலார் வந்து உறங்குவதர்காக வீட்டிற்கு வெளியில் திண்ணை கட்டி வந்தனர் .

முடிவுரை :
தமிழரின் இலக்கியம் , கல்வெட்டுகள் , தொல் பொருள் அகழ்வாராய்வுகள் , அவர்கள் பயன்படுத்தி வந்த பல்வகை மட்பாண்டங்கள் , செங்கல் கட்டமைப்புகள் , பண்டைய எழுத்து முறை , அகழ்ந்து எடுக்கப்பட்ட செயற்கைப் பொருட்கள் , குகைகள் மற்றும் மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்து வடிவங்கள் , ஆற்றுப் படுகைகளில் கிடைத்த நாணயங்கள் , அரசர்களின் சின்னங்கள் , பொறிக்கப்பட்ட நாணயங்கள் , ஆகியன சங்க கால மக்களின் வாழ்க்கை ஒழுக்கத்தினை அறிய உதவும் சான்றுகளாக இருந்தன . தமிழரின் சிறப்புகளை பற்றி கூறினோம் என்றால் அதை கூறிகொண்டே போகலாம் . தமிழ் என்றால் படித்து பார்க்க முடியாத புத்தகம் வானம் போல எண்ண முடியாத நட்சத்திரங்கள் போல் ஆகும் . தமிழ் மொழிக்கு எவ்வளவு புகழ் உள்ளதோ அதுபோன்று தமிழரின் பண்பாடுகளையும் அத்தகைய சிறப்புகளும் , புகழும் நிலைத்து இருக்கிறது.

எழுதுவது :

திவ்ய தர்ஷினி . இ
இளங்கலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டு
அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பண்டுதகாரன் புதூர் , மண்மங்கலம் , கரூர் – 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *