துருக்கியின் பறக்கும் காற்றாடி விமானம் உக்ரேன் போரால் உலகப் பிரசித்தி பெற்றிருக்கிறது.
சர்வதேச ரீதியில் துருக்கி போர் ஆயுதங்களுக்கோ, விமானங்களுக்கோ பிரசித்தி பெற்ற நாடாக இருந்ததில்லை. அந்த நிலையை மாற்றியிருக்கிறது. பைரக்தார் TB2 என்ற பெயரிலான காற்றாடிப் போர் விமானங்கள் உக்ரேன் இராணுவத்தால் ரஷ்யாவின் பாரிய போர் ஆயுத வாகனங்களைத் தாக்கப் பாவிக்கப்பட்டு வெற்றியடைந்திருக்கின்றன. ஏற்கனவே சிரியா, ஈராக், நகானோ கரபாக், லிபியா நாடுகளில் போர்களில் துருக்கிய இராணுவம் TB2 ஐ வெற்றிகரமாகப் பாவித்திருக்கிறது. ஆயினும், ரஷ்ய இராணுவத்தின் வான்வெளி காக்கும் போர் அமைப்புக்களையும், கவச வாகனங்களையும் அழித்ததன் மூலம் அவற்றின் புகழ் உலகெங்கும் பரவியிருக்கிறது.
துருக்கிய பைக்கார் நிறுவனத்தை நிறுவி நடத்திவரும் செல்சுக் பைரக்தார் அந்தக் காற்றாடிப் போர் தானியங்கி விமானங்களை வடிவமைத்திருக்கிறார். அவரது தந்தை ஒஸ்டெமிர் பைரக்தார் ஏற்கனவே துருக்கியின் விமானமொன்றை வடிவமைத்துத் தயாரித்திருக்கிறார். துருக்கிய ஜனாதிபதி எர்டகானைத் திருமணம் செய்தவர் செல்சுக் பைரக்தார் என்பதால் அரசியலிலும் அவர்கள் கை ஓங்கியிருக்கிறது.b2
25,000 மீற்றர் உயரம் வரை பறக்கக்கூடியது TB2. அதன் சிறகுகள் 12 மீற்றர் நீளமானவை. அந்த் விமானங்கள் லேசர் கண்களால் தேடிக் குறிப்பிட்ட புள்ளிகளிருக்கும் ஆயுதங்களை அழிக்க வல்லவை. ரஷ்ய இராணுவத்துக்குக் கிலியை உண்டாக்கியிருக்கும் அவைகளை வாங்க உலக நாடுகள் பலவற்றிலிருக்க்கும் விண்ணப்பங்கள் வந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் பைரக்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்