சவூதிய கோல்ப் போட்டியில் பங்குபற்றுகிறவர்கள் அமெரிக்காவின் போட்டியிலும் பங்குபற்றலாம்.
இவ்வார இறுதியில் பிரிட்டனில் நடைபெறவிருக்கிறது சவூதி அரேபியா நடத்தும் மிகப்பெரிய பரிசுத்தொகையுடனான கோல்ப் போட்டி (LIV Golf). அந்தப் போட்டிகளில் பங்குபற்றுகிறவர்கள் ஏற்கனவே பிரபலமான PGA சுற்றுப்
போட்டிகளில் பங்குபற்றுகிறவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஆனால், மேலுமொரு பிரபல பந்தயமான அமெரிக்காவின் கோல்ப் சுற்றுப் போட்டியின் அதிகாரம் இன்னொரு முடிவை எடுத்திருக்கிறது.
முன்னணியிலிருக்கும் வீரர்களான பில் மிக்கல்சன், டஸ்டின் ஜோன்சன் போன்ற சுமார் பத்துப் பேருக்கு அமெரிக்காவின் கோல்ப் சுற்றுப்போட்டியின் முடிவு மகிழ்ச்சியை அளிக்கிறது. சவூதிய கோல்ப் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும் அவர்களை அமெரிக்காவின் சுற்றுப்போட்டியில் விளையாட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்