“உலகின் ஒளி” தேவாலயத்தின் நிறுவனருக்குப் பாலியல் குற்றங்களுக்காக 17 வருடம் சிறைத்தண்டனை.
மெக்ஸிகோவின் கலாச்சார மையமான குவாடலஹாரா பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் ஒளி [la Luz del Mundo] எனப்படும் தேவாலயத்தின் நிறுவனர் நாசன் ஜுவாக்கின் கார்சியாவுக்கு அமெரிக்காவில் 17 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தனது காம இச்சைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் வயதுக்கு வராதவர்களை ஈடுபடுத்தியதற்காகவே அத்தண்டனை வழங்கப்பட்டது.
தனது பாலியல் இச்சைகளுக்கு வயதுக்கு வராத சிறுமிகளை உட்படுத்தியதுடன், அவர்களை வைத்துக் காம இச்சை சினிமாக்கத் தயாரித்தது, விபச்சாரத்துக்கு உட்படுத்திப் பணம் சம்பாதித்தது, வன்புணர்வுகள் போன்ற பல குற்றங்களுக்காக ஜுவாக்கின் கார்சியா விசாரிக்கப்பட்டபோது அவற்றைப் பற்றி விபரங்கள் வெளிவராமல் தன்னைக் குற்றவாளியாக ஏற்றுக்கொண்டதால் 17 வருடச் சிறைத்தண்டனையுடன் தப்பிவிட்டார் என்று குறிப்பிடப்படுகிறது.
ஜூவாக்கிம் கார்சியா மட்டுமன்றி தேவாலயத்தின் உயர்மட்டத் தலைவர்களும் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குற்றங்களை ஏற்றுக்கொண்டதால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தங்கள் பற்றிய விபரங்கள் வெளிவராமல் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்று கோபமடைந்திருக்கிறார்கள். இல்லாவிடில் ஜூவாக்கிம் கார்சியாவுக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகளும் கிடைக்கவில்லை.
தமது நிறுவனரும் உயர்மட்டத்திலிருக்கும் மேலும் சிலரும் தமது இழிவான குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை பெற்றிருப்பினும் “உலகின் ஒளி” தேவாலயத்தினர் இதுவரை அதுபற்றி ஒத்துக்கொள்ளவில்லை.
“இறைதூதுவர் யேசு கிறீஸ்து நாசன் ஜுவாக்கிம் கார்சியா எங்கள் ஆன்மீக வழிகாட்டியும் நம்பிக்கையின் ஒளியாகவும் இருக்கிறார்,” என்கிறார் அத்தேவாலயத்தின் பிரதிநிதி சிலெம் கார்சியா.
சாள்ஸ் ஜெ. போமன்