வாழ்வதற்கு செலவுகூடிய நகரமாக ஹொங்கொங்

உலகின் மிக வாழ்க்கைச்செலவு அதிகமான நகரங்கள் பட்டியலில் ஹொங்கொங் நகரம் முன்னிலையில் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் மிக வாழ்க்கைச்செலவு அதிகம் கொண்ட நகரம், மற்றும் சிக்கனமான நகரம் குறித்த ஆய்வு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆய்வை ECA International என்ற அமைப்பு நடத்தி ,ஆய்வின் நிறைவில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

குறித்த ஆய்வில் மேலதிகமாக நியூயார்க் 2ம் இடத்திலும், ஜெனீவா 3ம் இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதே வேளை உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் சிக்கனமான நகரமாக துருக்கியின் அங்காரா நகரம் விளங்குவதாகவும் அந்த அமைப்பு ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.

எழுதுவது : திசோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *