சும்மா இருப்போர் கூடிவிட்டது | சிறீலங்கா புள்ளிவிவரத் திணைக்களம்
சிறீலங்காவில் எந்தவிதமாமான தொழில்களையும் செய்யாதோர் தொகை கூடிவிட்டது என சிறீலங்காவின் தொகைமதிப்பு புள்ளிவிவரத்திணைக்களம் அறிவித்திருக்கிறது.
2021ம் ஆண்டின் நாட்டின் பணித்தரவுகளின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் பங்கெடுக்கும் மக்கள் எண்ணிக்கையினராக கிட்டத்தட்ட 8.55 மில்லியன் என்று குறிப்பிடுகிறது.
அதேவேளை பங்கெடுக்காதோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8.58 மில்லியன் மக்கள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வேலைத் தேடுபவர்கள் ஒருபுறம் இருக்க , எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வருவதாகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் , பெண்கள் 73 சதவீதமாக இருப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.