தனது பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவி கோரியிருக்கிறது லிதுவேனியா.
ரஷ்யப் பிராந்தியமான கலீனின்கிராடுக்குத் தனது நாட்டின் நிலப்பிராந்தியம் ஊடாகக் கொண்டு செல்லப்படும் சில பொருட்களுக்கு லிதுவேனியா தடை விதித்திருப்பது தெரிந்ததே. அதற்கு பதிலடியாகப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்திருப்பதால் லிதுவேனியாவில் சஞ்சலம் ஏற்பட்டிருக்கிறது.
வரும் நாட்களில் நடக்கவிருக்கும் ஐரோப்பிய உயர்மட்ட மாநாட்டில் ரஷ்யாவிலிருந்து தம்மைப் பாதுகாக்க உதவும்படி கேட்கப்போவதாக லிதுவேனிய அரசு அறிவித்திருக்கிறது. இராணுவ ரீதியாக ரஷ்யா தற்போது லிதுவேனியாவைத் தாக்கக்கூடும் என்று நம்பப்படவில்லை.
லிதுவேனியாவை அதிகாரங்களுக்கு, சமூகம் இயங்குவதற்கு வேண்டிய சேவைகளைக் கொடுக்கும் முக்கிய மையங்களுக்கு வேறு விதமான வகைகளில் ரஷ்யா இடைஞ்சல் செய்யலாம் என்று அஞ்சப்படுகிறது. லிதுவேனியாவின் மின்சாரம் பகிரும் வலைச்சேவையை ரஷ்யா தாக்கி இயங்கவிடாமல் செய்யக்கூடும் என்ற பயம் லிதுவேனியாவிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்