பின்லாந்துக்கும், ரஷ்யாவுக்குமான எல்லையில் பலமான பாதுகாப்பு வேலிகள் எழுப்பப்படும்.
நாட்டோ அமைப்பில் சேரத் தயாராகியிருக்கும் பின்லாந்து தனது நீண்டகால அரசியல் கோட்பாடான அணிசேராமையைக் கைவிட்டிருக்கிறது. பதிலாகப் புதிய நிலைமைக்கு ஏற்றபடியான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. அப்படியான ஒரு நடவடிக்கையாக ரஷ்யாவுடனான எல்லையில் கடுமையான பாதுகாப்புக் கொண்ட வேலிகள் அமைப்பது பற்றி அடுத்த வாரம் பின்லாந்தின் பாராளுமன்றம் வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறது.
இரு நாடுகளுக்குமிடையே சுமார் 34 மைல் நீளமான எலை இருக்கிறது. பெரும்பாலும் காடுகளுக்கு ஊடாகவே செல்லும் அந்த எல்லையில் ஆங்காங்கே உயரமற்ற வேலிகள் கால்நடைகளைத் தடுப்பதற்காகப் போடப்பட்டிருக்கின்றன. இனிமேல் எந்தச் சமயத்திலும் நிலைமை மோசமாகலாம் என்பதால் தயாராக இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சர் கிரிஸ்தா மெக்கொனன் கூறினார்.
எந்தெந்த இடங்களில் எப்படியான எல்லைகளைப் போடுவது என்பது பற்றிப் பின்லாந்தின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரம் ஆராய்ந்து வருகிறது. எல்லைக்காவலர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கவும், தொழில்நுட்பப் பாதுகாப்பை அதிகரிக்கவும் அரசு பெரும் தொகையை ஒதுக்கியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்