உக்ரேனில் போர் ஆரம்பித்ததால் நாடுதிரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
இவ்வருடம் பெப்வரவரி மாதக் கடைசியில் ரஷ்ய இராணுவம் உக்ரேனுக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று அங்கே உயர்கல்வி கற்றுவந்த சர்வதேச மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் அந்நாட்டை விட்டுத் தப்பியோடியதுமாகும். இந்திய மாணவர்கள் மட்டுமே சுமார் 18,000 பேர் உக்ரேனிலிருந்து திரும்பியிருக்கிறார்கள். தமது உயர்கல்வி என்னாலும் என்று மருத்துவ மாணவர்களாகிய அவர்களிடையே மனக்கவலை அதிகரித்து வருகிறது.
அவர்களில் பலர் தமது ஏழு வருட மருத்துவக் கல்வியில் பெரும்பாகத்தை முடித்தவர்களாகும். இந்தியாவின் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டவேண்டிய கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகச் சிறியதையே அவர்கள் உக்ரேனில் செலவிடவேண்டியிருந்தது. எனவே, உக்ரேனில் தமது கல்வியை முடித்துக்கொள்வது அவர்கள் பலரின் தொடர்ந்த விருப்பமாக இருந்து வருகிறது. அந்த மாணவர்களின் குடும்பங்கள் தமது சொத்துக்களில் பெரும்பகுதியை விற்றே அப்படிப்புக்கு ஒழுங்கு செய்திருந்தனர். கொவிட் 19 காலம் அவர்களுடைய நிலைமையை மேலும் மோசமாக்கியதால் இனி என்ன செய்வது என்று பலரும் மன உழைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் மிகவும் குறைவானவை. அவ்விடங்களுக்கான கத்திமுனைப்போட்டியில் தேறுகிறவர்கள் ஒரு பகுதியினரே. உக்ரேனில் படித்த மாணவர்கள் நாடு திரும்பி ஐந்து மாதங்களாகியும் கூட அவர்களை இந்தியாவில் கல்வியைத் தொடர அனுமதிப்பதா என்பது பற்றி இந்தியாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சு இன்னும் முடிவெதையும் எடுக்கவில்லை.
உக்ரேனில் சமீபத்தில் ரஷ்யாவின் குண்டுகள் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்களை அழித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்