உக்ரேனிலிருந்து போலந்துக்குள் அகதிகளாக வந்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் திரும்பிவிட்டார்கள்.
போலந்து எல்லைக்காவலின் விபரங்களின்படி பெப்ரவரி 24 இல் ரஷ்யாவின் படைகள் உக்ரேனுக்குள் நுழைந்தது முதல் ஜூலை 31 ம் திகதி வரை சுமார் 5.15 மில்லியன் உக்ரேனிலிருந்து அகதிகளாகப் போலந்துக்குள் நுழைந்தார்கள். அவர்களில் 3.25 மில்லியன் பேர் மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்பிவிட்டார்கள்.
ஜூலை 30 திகதியன்று போலந்துக்குள் 25, 400 உக்ரேன் அகதிகள் நுழைய 29,900 உக்ரேனியர்கள் போலந்திலிருந்து உக்ரேனுக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
உக்ரேன் அகதிகளில் பெரும்பாலானவர்கள் போலந்துக்குள் நுழைந்தார்கள். அதைத் தவிர உக்ரேனின் பக்கத்து நாடுகளும் கணிசமான அளவு அகதிகளுக்காகத் தமது கதவுகளைத் திறந்தன. ஐ.நா- வின் கணிப்பீடுகளின்படி சுமார் 6 மில்லியன் உக்ரேனியர்கள் ஐரோப்பாவுக்குள் அகதிகளாக நுழைந்திருக்கிறார்கள். அவர்களில் 1.2 மில்லியன் பேர் போலந்திலும், 670,000 பேர் ஜேர்மனியிலும், 400,000 பேர் செக்கியக் குடியரசிலும் வாழ்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்