சர்ச்சைக்குரிய சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் அம்பாந்தோட்டையிலிருந்து வெளியேறியது.
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான “Yuan Wang 5”. சிறீலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வருவது நாட்டை இரண்டு வல்லரசுகளுக்கு இடையே மாட்டிக்கொள்ளவைத்திருந்தது. ஒரு வழியாக திட்டமிட்ட நாளுக்கு ஐந்து நாட்கள் தாமதமாக அங்கே விஜயம் செய்த அக்கப்பல் அங்கிருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனக்கப்பலின் வருகை பற்றி இந்தியா தனது அதிருப்தியையும் விசனத்தையும் தெரிவித்தததால் அதன் வருகையை நிறுத்த முயன்றிருந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே. ஆனாலும், பல அபிவிருத்தித் திட்டங்களுக்காகச் சிறீலங்கா வாங்கியிருந்த கடன்களின் பளு காரணமாக அது நடக்கவில்லை. சமீப காலத்தில் சிறீலங்கா தனது சர்வதேசக் கடன்களின் வட்டியையும் கட்டமுடியாத நிலையில் பொருளாதார ஸ்தம்பித நிலமையில் மாட்டிக்கொண்டபோது இந்தியாவே பெருமளவில் தனது கடன்கள் மூலம் உதவியது. இந்தியாவின் அதிருப்தியையும் ஒரு வழியாகச் சமாளித்து சீனாவின் கப்பல் அம்பாந்தோட்டைக்கு வர அனுமதிக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்