கட்டுமானப் பொருள்களின் இறக்குமதி|தடைகள் சில தளர்ந்தது
கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான சிலபல மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை சில நிபந்தனைகளின் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், திறைசேரி செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் அனுமதி அவசியம் தேவைப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத் திட்டங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மூலப்பொருள், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
எவ்வாறாயினும், அத்தகைய பொருட்களை எந்த சூழ்நிலையிலும் மீண்டும் விற்பனை செய்ய இறக்குமதி செய்யக்கூடாது என்பதும் இங்கு குறிப்பிடப்படும் நிபந்தனை எனக் கூறப்படுகிறது
குறித்த இந்த இறக்குமதியானது 180 நாட்களுக்கு வழங்கப்படும் கடன் பத்திரங்களுக்கு உட்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடப்படுகிறது.