ரஞ்சன் ராமநாயக்க| விடுதலையின் பின் பதவியும் வழங்கப்பட்டிருகிறது
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நிபந்தனையின் கீழ் விடுதலைபெற்று வெளியே வந்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தன் ருவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கான நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, ” நான் உலகளாவிய ரீதியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் நல்லெண்ணத் தூதுவராக சிறையிலிருந்து விடுதலையான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார் .
இது வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ரஞ்சன் ராமநாயக்கவின் தனிப்பட்ட ஆளுமையையும் அறிவையும் பயன்படுத்துவதற்கான ஒரு அவரின் தன்னார்வ நிலைப் பதவியாகவும் இருக்கும் எனவும் மனுஷ் பதிவிட்டுள்ளார்.
அதனை ரஞ்சன் ராமநாயக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.